நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார்.

சனி இம்முறை மூன்று முறை வக்கிரமாக சஞ்சரிப்பதால் வழக்கமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் உலவும் சனியானவர் மூன்றாண்டுகள் துலாத்தில், தன் உச்ச ராசியில் உலவப் போவதால் பொதுவாக சுப பலன்களே அதிகம் உண்டாகும்.
இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஏற்கெனவே, கன்னி ராசிக்கும், துலா ராசிக்கும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, மீன ராசிக்கு அஷ்டம சனியும், மேஷ ராசிக்கு கண்ட சனியும் ஆரம்பமாகப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் திருத் தலங்களுக்குச் சென்று, சனிபகவானுக்குரிய வழிபாடுகளையும், பரிகாரங்களையும் முறையாகச் செய்தால், சுபயோகம் ஏற்படும்.
ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சி பலன்கள்