Sunday, May 31, 2009

சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் பிணங்கள்

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் பூட்டிய வீட்டுக்குள் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள கிருஷ்ணன் கோவில் சந்துவை சேர்ந்தவர் கணேசன். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி மருதவள்ளி(வயது35). இந்த தம்பதியினருக்கு ரம்யா(16) என்ற மகளும் பிரகாஷ்(11) என்ற மகனும் உண்டு.

மருதவள்ளி தனது 2 குழந்தைகளுடன் தாயார் காமாட்சி அம்மாளுடன் வசித்து வந்தார். குழந்தைகளை படிக்க வைத்து காப்பாற்றும் பொருட்டு, மருதவள்ளி தட்டுவடை சுட்டு விற்கும் கடையில் வேலைக்கு சென்றார். அதன் மூலம் தினமும் ரூ.50-க்கு மேல் கூலி கிடைக்கும். மகள் ரம்யா அம்மாபேட்டையில் உள்ள சவுராஷ்டிரா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்தாள். மகன் பிரகாஷ் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்தான்.

கணவர் இறந்த பின்பு கடந்த 8 ஆண்டுகளாக தாயார் மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்தி வந்த மருதவள்ளிக்கு, சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த தனது மாமா கிருஷ்ணனின் மகன் ராஜா(27) ஆதரவாக இருந்தார். ராஜா சொந்தமாக தங்க ஆசாரி வேலை செய்து வந்தார். ஆனால் அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் கூலிவேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, தனது தாயார் சுமதியுடன் தகராறு செய்து விட்டு, அம்மாபேட்டையில் வசித்து வந்த மருதவள்ளியுடன் சேர்ந்து குடும்பம் நடத்த தொடங்கினார்.மேலும் படிக்க

Saturday, May 30, 2009

பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதை அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.
மேலும் படிக்க

Tuesday, May 19, 2009

`மண வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்' கணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

மணவாழ்க்கை அமைதியாக நடைபெற வேண்டுமானால் மனைவியின் பேச்சை கேட்டு அதற்கு தலையாட்டி நடக்க வேண்டும் என்று கணவன்மார்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி இருக்கிறது.

மணவாழ்க்கை அமைதியாக செல்வதற்கு திருமண ஆலோசகர்களிடம் இருந்து ஆலோசனை கருத்துகள் வருவது வழக்கம். அதுபோல, மனைவி சொல்வதை கேட்டு நடக்குமாறு சில பெரியவர்களும் அறிவுரை கூறலாம். ஆனால், முதன் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் இருந்து இத்தகைய அறிவுரை வந்திருக்கிறது.

சண்டிகாரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான கிரிமினல் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் விவாகரத்து கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான கிரிமினல் குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க

Sunday, May 17, 2009

பிரபாகரன் என்ன ஆனார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டுவிட்டதாகவும் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கியுள்ளன. இதனால் உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகள் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் எனவே அப்பகுதியில் முழுவீச்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து போர் இன்று அல்லது நாளைக்குள் முடிவுக்கு வரும் என்றும் ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

Saturday, May 16, 2009

ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளருமான ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் இராஜ கண்ணப்பன் 3,555 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக முதலில் செய்திகள் வந்தது.

ஆனால் தேர்தல் முடிவை சிதம்பரம் ஏற்கவில்லை என்றும் மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றும் கோரியதாகவும், அதன் அடிப்படையில் மறுகூட்டல் செய்ததில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் தேர்தல் செய்திகள்

சிவகங்கையில் ப.சிதம்பரம் தோல்வி!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தோல்வியடைந்தார்.

வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த அஇஅதிமுக வேட்பாளர் இராஜ கண்ணப்பன் இறுதியில் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று சிதம்பரம் கோரியுள்ளதால் இறுதி முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் தேர்தல் முடிவுகள் அறிய

மக்களவை தேர்தல் 2009 முடிவுகள்

தமிழகத்தில் வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை முடிவடை‌ந்த தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றவ‌ர்க‌ளி‌ன் விபரங்கள் :


ஈரோடு தொகு‌தி‌யி‌ல் ம‌திமுக வே‌ட்பாள‌ர் கணேசமூ‌ர்‌த்‌தி 47,343 வா‌க்குக‌ள் வ‌ி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

த‌ஞ்சை‌யி‌ல் ‌திமுக வே‌ட்பாள‌ர் பழ‌னி மா‌ணி‌க்க‌ம் 1,05,723 வா‌க்குக‌ள் ‌‌வி‌த்‌தியாச‌த்‌தில‌் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

கடலூ‌ரி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் கே.எ‌‌ஸ். அழ‌கி‌ரி 23,532 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌‌ற்று‌ள்ளா‌ர்.

‌விருதுநக‌ர் தொகு‌தி‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் மா‌ணி‌க்தா‌க்கூ‌ர் (2,59,808 வா‌க்குக‌ள்) வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். ம‌திமுக வே‌ட்பாள‌ர் வைகோ தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர். இவ‌ர் 2,47,155 வா‌க்குக‌ள் பெ‌ற்றா‌ர்.

கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன் 3,111 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.
மேலும் விபரங்கள்

Friday, May 15, 2009

மக்களவை தேர்தல் முடிவுகள்

மக்களவை தேர்தல் முடிவுகள் : காங. :182 பி.ஜே.பி.:127 கம்யூ: 28 மற்றவை:100 தமிழகம் : திமுக:18 அதிமுக:16 தேமுதிக:0

மு‌ன்‌னிலை ‌விவர‌ங்க‌ள்

திண்டுக்கல் தொகுதி 3வது சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 41,001 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் 39,436 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சித‌ம்பர‌ம் தொகு‌தி‌யி‌ல் ‌‌திருமாவளவ‌ன் 33,840 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.

‌திருவ‌ள்ளூர‌் தொகு‌தி‌யி‌ல் ‌அ‌திமுக வே‌ட்பாள‌ர் வேணுகோபா‌ல் 35இ580 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

‌திருநெ‌ல்வே‌லி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் அ‌ண்ணாமலை 2300 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

தெ‌ன்கா‌சி‌யி‌ல் ‌லி‌ங்க‌ம் 19,900 வா‌க்குகளையு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் வெ‌ள்‌ளை பாண‌்டிய‌ன் 16007 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

கோவை‌யி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் வே‌ட்பாள‌ர் நடராஜ‌ன் 16,302 வா‌க்குகளையு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ‌பிரபு 15,500 வா‌க்குகளு‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர்.

ம‌த்‌திய செ‌ன்னை‌யி‌ல் தயா‌நி‌தி மாற‌ன் 3233 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.
மேலும் படிக்க

எமது கடைசி வேண்டுகோள் :விடுதலைப்புலிகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது :-

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிங்களப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மேலும் படிக்க

Friday, May 8, 2009

வேலைக்காரி வேடத்தில் சென்று வீடுகளில் திருடும் பெண்

சென்னை மந்தவெளி கட்ஸ்லைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் நளினிகேசவராஜ். இவருடைய வீட்டில் கடந்த 4-ந் தேதி அன்று தங்க நகைகளும், ரொக்கப்பணமும் திருட்டு போய் விட்டது. இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் டாக்டர் நளினியின் வீட்டில் லட்சுமி (வயது 43) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், திடீரென்று காணாமல் போய் விட்டதாகவும் தெரியவந்தது. வேலைக்காரப் பெண் லட்சுமிதான் நகையை திருடி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
மேலும் படிக்க

Thursday, May 7, 2009

தாமதித்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்: கோத்தபய ராஜபட்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2006-ல் போரை உரிய நேரத்தில் தொடங்காமல் இருந்திருந்தால் இந் நேரம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபட்ச கூறுகிறார்.

இலங்கை ஒலிபரப்பு கார்ப்பரேஷனுக்கு அளித்த பேட்டியில் கோத்தபய கூறியிருப்பதாவது:

"2005-ல் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தார். அப்போது விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவாக இருந்தனர். அந்த நிலையில் வன்னி பகுதியில் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஆரம்பித்தோம். அதன் தொடர் விளைவாகவே படிப்படியாக விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிந்தது.

அதன் பிறகு விடுதலைப் புலிகளின் ராணுவ வலிமையைப் பார்த்து மலைத்துவிடாமல், எதிர் நடவடிக்கைகளை எடுத்ததால் அவர்களை ஒடுக்க முடிந்தது. இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற நிலை இந் நேரம் ஏற்பட்டிருக்கும்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற முடிவில் அதிபர் மகிந்த ராஜபட்ச உறுதியாக இருந்தார். அதற்காக ராணுவத்தில் உரிய பதவிகளுக்கு உரிய நபர்களைத் தேர்வு செய்து நியமித்துப் போரைத் தொடங்கினார். மேலும் படிக்க

Wednesday, May 6, 2009

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம் - தமிழருவி மணியன்

உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு,

அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது.

அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.

'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்கால

நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்' என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான். மேலும் படிக்க

Monday, May 4, 2009

வகுப்பறையில் மாணவியிடம் செக்ஸ் குறும்பு செய்த ஆசிரியர் கைது

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் சரகம் நல்லாங்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மனைவி காஞ்சனா, இவர்களது மகள் துர்காதேவி (வயது 17) கடந்த ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் இருக்கும் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிய பழனிச்சாமி (வயது 30) என்பவர் மாணவி துர்காதேவியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டதாக புகார் வந்தது.

வகுப்பறையில் மாணவி துர்காதேவி தனியாக இருக்கும்போது ஆசிரியர் பழனிச்சாமி கட்டிப்பிடித்து மானபங்கம் செய்துள்ளார்.
மேலும் படிக்க

சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க... -:சீமான் ஆவேசப்பேச்சு

திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், கேமரா கவிஞர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, தமிழ்க் குலம் தழைக்க தன்னையே எரித்துக் கொண்ட தியாகச் சுடர் முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

’’இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை... ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.

காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!
மேலும் படிக்க

போர் நிறுத்தம் கோரவில்லை இந்தியா: கோத்தபய ராஜபட்ச

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 24-ம் தேதி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.

அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் "சண்டே அப்சர்வர்' பத்திரிகைக்கு கோத்தபய ராஜபட்ச அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அதில் சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தியதாக கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

Sunday, May 3, 2009

இலங்கை ராணுவம் மீண்டும் இரசாயணத் தாக்குதலுக்கு தயாராகின்றது.

அண்மையில் சிறிலங்காவின் இரசாயணத் தாக்குதலில் எரிகாயங்களுக்கு உள்ளான பொது மகன் ஒருவரின்
புகைப்படம்

கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன.

கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாக தமிழ் மக்கள் மீது இரசாயணத் தாக்குதல்களை சிறிலங்கா நடத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.

இதேவேளை, தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை எனக் கூறிவரும் சிறிலங்கா, தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பகுதியில் செயற்பட்ட மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு சிகிச்சைபெற்று வந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்திருந்தவர்கள் உட்பட 87 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், மீண்டும் பாரிய இராணுவ நகர்வொன்றை மேற்கொள்வதற்கு தயாராகியுள்ள சிறிலங்கா இராணுவம், இம்முறை பெரும் அழிவை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இரசாயண ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது. அவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தஞ்சமடைந்துள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வரையான மக்கள் பெரும் அழிவொன்றினை சந்திக்க நேரிடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக அறிவித்த போர் நிறுத்தத்தை நிராகரித்த சிறிலங்கா, சர்வதேச நாடுகள் விடுத்த வேண்டுகோள்களையும் நிராகரித்து பெரும் அழிப்புத் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 2, 2009

கள்ளக்காதலியை நிர்வாணப்படுத்தி அடித்துக்கொலை செய்த ஆசிரியர் கைது.

நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த ஆசிரியர் கைதானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 12 வயது சிறுவன் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 40). இவர் தேனி மாவட்டம் சோத்துப்பாறை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செந்தில்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டில் ஆசிரியர் ராஜகோபால், தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது அங்கு அன்னதானம் வழங்கிய சென்னையை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புஷ்பகலா(36)வுடன் பழக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னைக்கு அடிக்கடி சென்று புஷ்பகலாவை சந்தித்து வந்த ராஜகோபால் கடந்த 2008-ம் ஆண்டில் புஷ்பகலாவை தன்னுடன் வத்தலக்குண்டுக்கு அழைத்து வந்து விட்டார். புஷ்பகலாவுடன் அவரது மகன் மகேஸ்வரன்(12) அழைத்து வரப்பட்டான். அவனை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு மாணவர் விடுதியில் தங்கி படிக்க ராஜகோபால் ஏற்பாடு செய்தார்.

அதன்பிறகு கள்ளக்காதலி புஷ்பகலாவுடன் கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் கடந்த 28-ந்தேதி புஷ்பகலா, ராஜபாளையம் சென்று மகன் மகேஸ்வரனை தன்னுடன் அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த ராஜகோபால் ஆத்திரம் அடைந்தார்.
மேலும் படிக்க

கலைஞர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான திருச்சி பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்ததுமே முதல்வருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று இரவு முழுவதும் காய்ச்சல் அடித்தது.


இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க

Friday, May 1, 2009

காங்கிரசுக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ்திரையுலகம்

"காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், தமிழின விரோதிகளை அடையாளம் காட்டுவதற்காக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடத்தவுள்ளோம்,'' என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறினார்.


"தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம். எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் பிரசார பொதுக் கூட்டம் நடத்த உள்ளோம்.


இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய் மேலும் படிக்க

மீராஜாஸ்மின் பிரசாந்த் காதல்.

நடிகர் பிரசாந்துக்கும் தொழில் அதிபர் மகள் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பிரசாந்த் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையில் பிரசாந்தும் நடிகை மீராஜாஸ்மினும் காதலிப்பதாக வாரபத்திரிகையொன்றில் கிசுகிசு வெளியானது. மீராஜாஸ்மின் தற்போது மம்பட்டியான் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த்,
மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...