சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள கிருஷ்ணன் கோவில் சந்துவை சேர்ந்தவர் கணேசன். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி மருதவள்ளி(வயது35). இந்த தம்பதியினருக்கு ரம்யா(16) என்ற மகளும் பிரகாஷ்(11) என்ற மகனும் உண்டு.
மருதவள்ளி தனது 2 குழந்தைகளுடன் தாயார் காமாட்சி அம்மாளுடன் வசித்து வந்தார். குழந்தைகளை படிக்க வைத்து காப்பாற்றும் பொருட்டு, மருதவள்ளி தட்டுவடை சுட்டு விற்கும் கடையில் வேலைக்கு சென்றார். அதன் மூலம் தினமும் ரூ.50-க்கு மேல் கூலி கிடைக்கும். மகள் ரம்யா அம்மாபேட்டையில் உள்ள சவுராஷ்டிரா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்தாள். மகன் பிரகாஷ் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்தான்.
கணவர் இறந்த பின்பு கடந்த 8 ஆண்டுகளாக தாயார் மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்தி வந்த மருதவள்ளிக்கு, சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த தனது மாமா கிருஷ்ணனின் மகன் ராஜா(27) ஆதரவாக இருந்தார். ராஜா சொந்தமாக தங்க ஆசாரி வேலை செய்து வந்தார். ஆனால் அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் கூலிவேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, தனது தாயார் சுமதியுடன் தகராறு செய்து விட்டு, அம்மாபேட்டையில் வசித்து வந்த மருதவள்ளியுடன் சேர்ந்து குடும்பம் நடத்த தொடங்கினார்.மேலும் படிக்க
No comments:
Post a Comment