Friday, May 8, 2009

வேலைக்காரி வேடத்தில் சென்று வீடுகளில் திருடும் பெண்

சென்னை மந்தவெளி கட்ஸ்லைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் நளினிகேசவராஜ். இவருடைய வீட்டில் கடந்த 4-ந் தேதி அன்று தங்க நகைகளும், ரொக்கப்பணமும் திருட்டு போய் விட்டது. இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் டாக்டர் நளினியின் வீட்டில் லட்சுமி (வயது 43) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், திடீரென்று காணாமல் போய் விட்டதாகவும் தெரியவந்தது. வேலைக்காரப் பெண் லட்சுமிதான் நகையை திருடி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...