Saturday, May 2, 2009

கள்ளக்காதலியை நிர்வாணப்படுத்தி அடித்துக்கொலை செய்த ஆசிரியர் கைது.

நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த ஆசிரியர் கைதானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 12 வயது சிறுவன் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 40). இவர் தேனி மாவட்டம் சோத்துப்பாறை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செந்தில்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டில் ஆசிரியர் ராஜகோபால், தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது அங்கு அன்னதானம் வழங்கிய சென்னையை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புஷ்பகலா(36)வுடன் பழக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னைக்கு அடிக்கடி சென்று புஷ்பகலாவை சந்தித்து வந்த ராஜகோபால் கடந்த 2008-ம் ஆண்டில் புஷ்பகலாவை தன்னுடன் வத்தலக்குண்டுக்கு அழைத்து வந்து விட்டார். புஷ்பகலாவுடன் அவரது மகன் மகேஸ்வரன்(12) அழைத்து வரப்பட்டான். அவனை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு மாணவர் விடுதியில் தங்கி படிக்க ராஜகோபால் ஏற்பாடு செய்தார்.

அதன்பிறகு கள்ளக்காதலி புஷ்பகலாவுடன் கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் கடந்த 28-ந்தேதி புஷ்பகலா, ராஜபாளையம் சென்று மகன் மகேஸ்வரனை தன்னுடன் அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த ராஜகோபால் ஆத்திரம் அடைந்தார்.
மேலும் படிக்க

Related post



1 comment:

  1. கொடுமைகளை என்னவென்று சொல்லுவது! இங்கும் ஈழத்தில் சிறுமி முதல் வயது முதிர்ந்தோர்வரை
    தமிழ் இயக்கங்களாலும்,
    அரச படையினராலும்!
    ஐயகோ!
    என்னே மானிடப் பிறப்பின் தலைவிதி -
    யாரிடம் சொல்வது?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...