மணவாழ்க்கை அமைதியாக செல்வதற்கு திருமண ஆலோசகர்களிடம் இருந்து ஆலோசனை கருத்துகள் வருவது வழக்கம். அதுபோல, மனைவி சொல்வதை கேட்டு நடக்குமாறு சில பெரியவர்களும் அறிவுரை கூறலாம். ஆனால், முதன் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் இருந்து இத்தகைய அறிவுரை வந்திருக்கிறது.
சண்டிகாரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான கிரிமினல் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் விவாகரத்து கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான கிரிமினல் குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment