Tuesday, March 31, 2009

அ.தி.மு.க., கூட்டணியில் பிளவு?

அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியாகி உள்ளது. ம.தி.மு.க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சிகள், கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடு பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர உள்ளது. ஜெயலலிதாவின் அழைப்புக்காக காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து, இதுவரை 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தே.மு.தி.க., தலைமை அறிவித்துள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணி

ஆனால், அ.தி.மு.க - பா.ம.க - ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் தொகுதி பிரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த அணியில் கடைசியாய் சேர்ந்த பா.ம.க., தேவையான ஏழு தொகுதிகளை கேட்டுப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.

ஆனால், கடந்த சட்டசபை தேர்தல் முதலே இந்தக் கூட்டணியில் நீடிக்கும் ம.தி.மு.க.,வுக்கு இன்னும் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இதேபோல், லோக்சபா தேர்தலுக்காக இந்த அணியில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை. மேலும், இந்த இரு கட்சிகளும் ஒரே தொகுதியை கேட்டு வருவதாலும் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது.

இதனால், அ.தி.மு.க., தலைமை மீது இந்த இரு கட்சித் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என நேற்று முன்தினம் வரை எதிர்பார்த்து காத்திருந்த ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெறுத்துப் போனதுதான் மிச்சம்.

நீண்டநேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜனும் வெறுப்பானார்.

இதனால் தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பினர் கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த பரிசீலனையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

நேற்று காலை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை தொடர்புகொண்டு கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் ம.தி.மு.க.,வை தங்களுடன் அழைத்து வருவதாக விஜயகாந்திடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர். அதற்கு விஜயகாந்த், "பிரசாரத்தில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல முடியவில்லை; நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு பதில் சொல்கிறேன்' எனக் கூறியதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்த பிரச்னைக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறியபோது, அக்கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜன், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார். மூன்றாவது அணியில் சேரும்படி விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார்.

முதலில் அதற்கு சம்மதம் தெரிவித்த விஜயகாந்த், சில காரணங்களால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். இந்த நிலையில், மார்க்சிஸ்ட்- தே.மு.தி.க., இடையே துவங்கியுள்ள ரகசிய பேச்சால் தமிழக அரசியலில் மீண்டும் அணி மாற்றங்கள் ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

ம.தி.மு.க: பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்தே போட்டியிட்டு தி.மு.க -அ.தி.மு.க., அணிகளுக்கு சவால் விடுக்கலாமா என்று ம.தி.மு.க.,வும் யோசிக்கத் துவங்கியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி

தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கித்தர முன்வந்தனர். இதனால், மனித நேய மக்கள் கட்சி தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடு பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அ.தி.மு.க.வில் கூட்டணி சேர மனிதநேய மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பிரச்சினையை முதலில் தீர்த்த பிறகே, மனிதநேய மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிவிட்டார்.

இதனால், ஜெயலலிதாவின் அழைப்புக்காக மனிதநேய மக்கள் கட்சியினர் காத்திருக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணியிலும், கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடவும் மனிதநேய மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்து நடக்கிறதென்று பார்ப்போம்.

அன்புமணி பதவியைக் காப்பாற்றவே ராமதாஸ் முயன்றார்: கருணாநிதி

அமெரிக்காவில் தமிழக என்ஜினீயரின் கொடூர செயல் தனது குடும்பத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றார்

Monday, March 30, 2009

நாளை, கம்ப்யூட்டர்களுக்கு ஆபத்து உலகம் முழுவதும் வைரஸ் தாக்கும் அபாயம்

கம்ப்யூட்டர்களை நாளையதினம் வைரஸ் தாக்கும் என்று உலகம் முழுவதும் பீதி நிலவுகிறது. இதற்காக, `கான்பிக்கர் சி' என்ற இன்டர்நெட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகும்.

இதில், ஏப்ரல் 1-ந் தேதி கம்ப்யூட்டர்களை தாக்கும் வகையில் `கட்டளை' பிறப்பிக்கப்பட்டு, பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் வைரஸால் தாக்கப்படலாம் அல்லது இன்டர்நெட்களில் தேவையற்ற இ-மெயில்கள் வந்து குவியலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும்......

பங்குச் சந்தை : ஒரே நாளில் 480 புள்ளிகள் வீழ்ச்சி

தமிழ் ஈழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி : கருணாநிதி

Sunday, March 29, 2009

நடிகை ரோஜாவின் ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு

நடிகை ரோஜாவின் ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பானதால் ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக நடிகை ரோஜா இருக்கிறார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் அவர் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டு உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள நடிகை ரோஜாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ஆந்திராவில் அவருடைய ஆபாச படம் கடந்த வாரம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் இந்த படம் ஒளிபரப்பானது.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாச படத்தை தற்போது, விஷமிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி வருகிறார்கள். இந்த படத்தில் தொடர்ச்சி......

வருண்காந்தி மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

உடன்பாடு ஏற்படவில்லை: அதிமுக அணியில் பேச்சுவார்த்தை தொடர்கிறது

Saturday, March 28, 2009

டாக்டர் அண்ணனுக்கு 7 தொகுதிகள். அண்ணன், அன்பு சகோதரி சந்திப்பில் உடன்பாடு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு மேல்சபை பதவியும் வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று இருந்தது. இந்த தேர்தலில் பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணிக்கு அணி மாறி உள்ளது. பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது.

தொகுதி பங்கீடு சம்பந்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப்பேச இருப்பதாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை 10.40 மணிக்கு போயஸ் கார்டனுக்கு காரில் வந்தார். அவருடன் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி உடன் வந்தார். டாக்டர் ராமதாஸ் வந்த கார் மட்டும் போயஸ் கார்டனுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

டாக்டர் ராமதாஸ் காரில் இருந்து இறங்கியதும், அவரை அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாசலுக்கு வந்து டாக்டர் ராமதாசை வரவேற்றார். இருவரும் பரஸ்பர உடல் நலம் விசாரித்துக்கொண்டனர். ஜெயலலிதாவுக்கு டாக்டர் ராமதாஸ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோரை ஜெயலலிதா வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.

இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் முதலில் கூட்டணி தொடர்பாக பேசி உறுதி செய்தனர். பிறகு தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பா.ம.க.வுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகள் பற்றி டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவிடம் எடுத்துக்கூறினார். டாக்டர் ராமதாசின் கோரிக்கைகளை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு காலை 10.40 மணி முதல் 11.20 வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு மேல் சபை பதவியும் ஒதுக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தொகுதி பங்கீடு பேச்சு வார்தை சுமூகமாக முடிந்தது. ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் 8 வருடங்களுக்கு பிறகு நேற்றுதான் சந்தித்து பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி உடன்பாடு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2009-வது பாராளுமன்ற மக்கள் அவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்ததும் ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்தனர். இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். முதலாவதாக ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து நடைபெற உள்ள 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பது என்று உடன் படிக்கை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் டாக்டர் அவர்களுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 2010-ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.

இதன் பின்பு டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பு சகோதரியோடு பாட்டாளி மக்கள் கட்சி இன்று கூட்டணி சேர்ந்துள்ளது. இது வெற்றி கூட்டணி ஆகும். புதுச்சேரி உள்ளபட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி சாதாரணமாக வெற்றிபெற போவது இல்லை, மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி பெற போகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டணியில் இணைந்ததற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்து பதிலும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு ஏற்பட்டு விட்டதா?

பதில்:- மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் தான் 3-வது அணியில் இல்லை என்று கூறியிருக்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க. அணியில் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் உறுதிபட கூறியிருக்கிறாரே?

கேள்வி:- தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா?

பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை காத்திருங்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? தி.மு.க. வெற்றிவாய்ப்பை பாதிக்குமா?

பதில்:- நான் டாக்டர் அண்ணன் அவர்களை 8 வருடத்திற்கு பிறகு சந்திக்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்கள் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி என்றும் தோற்கடிக்க முடியாத அணி என்றும் வர்ணித்துள்ளனர்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி எப்படி உறுதியாக வெற்றிபெறும் என்று கூறுகின்றீர்கள்?

பதில்:- இது பற்றி தேர்தல் முடிவு வரும்போது நீங்களே பார்ப்பீர்கள். இதற்கு மேல் நான் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று ஜெயலலிதா கூறினார்.

பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா-பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
13.5.2009 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்கள் அவைபொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு கீழ்கண்ட பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி, 1. ஸ்ரீபெரும்புதூர், 2. அரக்கோணம், 3. திருவண்ணாமலை, 4. கள்ளக்குறிச்சி, 5. சிதம்பரம் (தனி), 6.தர்மபுரி, 7.புதுச்சேரி ஆகிய தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்......

ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் : ராமதாஸ் பற்றி விஜயகாந்த் கிண்டல்

திமுக 21 - காங்கிரஸ் 16: மக்களவைத் தேர்தல் உடன்பாடு

Friday, March 27, 2009

எனது கட்சியுடன் கூட்டணிக்காக பல கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் : விஜயகாந்த்

கூட்டணி வைத்துக்கொள்வதற்காக 15 தொகுதிகளும், பல கோடி ரூபாயும் தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரசாரத்தை தொடங்கிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு வந்தார். அங்கு அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் தலைமையில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழி நெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து திறந்த வேனில் நின்றபடி கை அசைத்தவாரே விஜயகாந்த் வந்தார். நெல்லை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை அறிமுகப்படுத்தி வைத்தும், ஆதரவு கேட்டும் பிரசாரத்தை தொடங்கினார். காவல் கிணறு அருகே உள்ள கூட்டப்புளியில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:-

மீன்பிடி தொழிலை நம்பி இப்பகுதி மக்களின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்கவில்லை. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களை ஏமாற்றி வருகிறது. அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மீனவர்கள் மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அவர்களின் வாழ்க்கை தரம் உயர ஆட்சியில் இருப்பவர்கள் எதுவும் செய்யவில்லை. ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கிறார்கள் என்று காரணம் மட்டும் சொல்கிறார்கள்.

கடலில் வாழும் மீன்களுக்கு எல்லை கிடையாது. ஆனால் அந்த மீன்களை பிடிக்கச் செல்லும் மீனவர்களை மட்டும் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்க்கிறதே தவிர, நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க - அ.தி.மு.க. கட்சியினர் மாறிமாறி அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை.

தேர்தல் கூட்டணி பற்றி என்னிடம் பேசினார்கள். 15 சீட்டும், பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் நான் விலைபோகவில்லை. நான் ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கிடையாது என்பதை கூறிவந்தேன். அதில் உறுதியாகவும் உள்ளேன்.

மக்களுடனும், ஆண்டவனுடனும்தான் எனது கூட்டணி. நான் மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

தி.மு.க - அ.தி.மு.க. கட்சிகள் மக்களுக்கு தேவையான எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக ஊழலையும், லஞ்சத்தையும் வளர்த்துள்ளார்கள்.

அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். லஞ்சத்தையும், வறுமையையும் ஒழிப்போம் என்று யாரும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் வறுமையையும், லஞ்சத்தையும் ஒழிப்போம் என்று தே.மு.தி.க. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த நீங்கள் மட்டும் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகிறீர்கள். உங்களைப் பற்றி நினைக்காதவர்களுக்கு எதற்கு ஓட்டுப்போடுகிறீர்கள். இதுவே அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சரியான தருணம். இந்த முறை உங்களுடன் கூட்டணி வைத்துள்ள எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பின்னர் கூட்டப்புளியில் இருந்து புறப்பட்டு செட்டிகுளம் கிராமத்திற்கு சென்றார். அங்கு கட்சி தொண்டர்கள் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியதாவது:-

தேர்தலில் 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் பாராளுமன்றத்தில் நமது குரல் ஓங்கி ஒலிக்கும். நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும். நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது என்று சொல்கிறார்கள்.

இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குளி ஆகிய ஊர்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி நெல்லை வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். மதியம் 1.30 மணிக்கு திசையன்விளைக்கு வந்த விஜயகாந்த் மெயின்ரோட்டில் கொளுத்தும் வெயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தலை முதன் முறையாக தே.மு.தி.க. சந்திக்கிறது. இதற்கு முரசு சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் மிகப்பெரிய கட்சிகள் கூட்டணி குறித்து பேசி 15 இடங்களும், பணமும் தருவதாக சொன்னார்கள். நான் கோடிக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. கோடி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள். இப்போது மக்களை ஏமாற்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்கள். கவர்ச்சி திட்டம் மக்களுக்கு தேவையில்லை. மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்தினால் போதும்.

தமிழ்நாடுதான் இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் மாநிலம் ஆகும். 40 தொகுதிகளில் வெற்றி பெறும் போது நாம் கைகாட்டுகிறவர்தான் பிரதமர். இது டெல்லிக்காக நடைபெறும் தேர்தல் என்று வேறு யாருக்காவது ஓட்டு போடாதீர்கள். சட்டப்பேரவை தேர்தலைப் போன்று இது அல்ல என்று நினைத்துவிடாதீர்கள்.

தற்போது தேசிய கட்சிகள் மாநில கட்சிகளையே நம்பி உள்ளன. பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 இடங்களைத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இதுவா தேசிய கட்சி. இந்த தேசிய கட்சி உங்களுக்காக எந்த நன்மையாவது செய்துள்ளதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே மின்சாரத்திற்கும், கோர்ட்டுக்கும் விடுமுறைவிட்ட அரசு தி.மு.க. அரசு தான். மக்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏமாறக்கூடாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கை உள்ள தே.மு.தி.க.வுக்கு ஓட்டளியுங்கள். நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எங்களின் சட்டையைப் பிடித்து நீங்கள் கேட்கலாம்.

நான் மக்களோடு இருக்கிறேன். தற்போது விவசாயிகளுக்கு இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. பகலிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

முன்னதாக நேற்று காலை 10.45 மணிக்கு ஆரல்வாய்மொழியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:-

நான் எம்.ஜி.ஆர். ரசிகன். அவர் வழியிலேயே நடப்பேன். ஜானகி எம்.ஜி.ஆர். நடத்தும் காதுகேளாதோர் பள்ளிக்கு வேறு யாராவது நிதி உதவி அளித்தார்களா? நான் அளித்து வருகிறேன். ஆனால் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். படத்தையே பயன்படுத்தக்கூடாது என்று ஜெயலலிதா சொல்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் அரசு பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 10 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். வேலைநீக்கம் செய்த இவர்களா ஏழை மீது அன்பு வைப்பார்கள்? டான்சி ஊழலில் கையெழுத்து போட்டுவிட்டு கையெழுத்து போடவில்லை என்கிறார். இவர்களா ஏழைகளை காப்பாற்றுவார்கள்?


அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பா.ஜனதாவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து பதவியை அனுபவித்துவிட்டு பா.ஜனதாவை மதவாத கட்சி என்று சொல்கிறார்கள். மக்களை மிஞ்சி யாரும் இல்லை. மக்கள் ஓட்டுப் போட்டால்தான் மந்திரி. மக்களை மதிக்க தெரியாதவர்களை மந்திரியாக தேர்ந்து எடுக்காதீர்கள். எனவே, ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என்று உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் பேசினார். மேலும்......

பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: உடல் சிதறி 50 பேர் பலி

இன்று கைதாகிறார் வருண் காந்தி?

Thursday, March 26, 2009

அ.தி.மு.க. கூட்டணியில் புது சிக்கல்

3 தொகுதிகளைபெற இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டிபோடும் நிலையில், தற்போது பா.ம.க.வைவிட ம.தி.மு.க. கூடுதல் தொகுதி கேட்பதால் அ.தி.மு.க. கூட்டணியில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக குழு அமைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகின்றன. தற்போது, 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களுக்கு, மதுரை, வடசென்னை, திருப்பூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர் அல்லது திருச்சி ஆகிய 6 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டு வருகின்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தங்கள் பங்கிற்கு வடசென்னை, நாகப்பட்டினம், திருப்பூர், தென்காசி, கோவை, விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளை கேட்டு வருகின்றது.

இதில், சிக்கல் என்னவென்றால், வடசென்னை, திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளை இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் கேட்டு வருகின்றன. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் சிக்கல் நீடித்து வந்தது. இரு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் அழைத்து, அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டு குழுவினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவந்தனர்.

மற்றொரு பக்கத்தில் ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து, பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தின்போது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட ம.தி.மு.க. தரப்பினர், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் கொடுத்தால், எங்களுக்கு அதைவிட ஒரு தொகுதி கூடுதலாக தரவேண்டும் என்று புதிய கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கும் ம.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. மேலும், புதிதாக கூட்டணியில் சேர்ந்துள்ள பா.ம.க.வுக்கு வடமாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு என்றும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருப்பதாக ம.தி.மு.க.வினர் கூறிவருகின்றனர். இதனால், பா.ம.க.வைவிட கூடுதல் தொகுதி வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் ம.தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே, 3 தொகுதிகளை பெற இரு கம்ïனிஸ்டு கட்சிகளும் போட்டிபோட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது ம.தி.மு.க. கூடுதல் தொகுதி கேட்பது அ.தி.மு.க. கூட்டணியில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும்.......

'சென்செக்ஸ்' மீண்டும் 10,000 புள்ளிகளை தாண்டியது

ராஜபட்சவின் அழைப்பை நிராகரித்தது புலிகள் ஆதரவு கட்சி

தே.மு.தி.க. தனித்து போட்டி

Tuesday, March 24, 2009

கைதி எண் 2432

ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை புழல் ஜெயிலில் தீவிரவாதிகள் `பிளாக்'கில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தண்டனை கைதி என்பதால் அவருக்கு கைதிகளுக்கான நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அவரது நம்பர் 2432 ஆகும்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 10 பேர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ராஜகோபாலும் மற்ற 9 பேரும் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் `பிளாக்'கில் அடைக்கப்பட்டனர்.

இவர்களது பக்கத்து அறையில், மாறன் போன்ற தமிழ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே பிளாக்கில் அல்-உம்மா தீவிரவாதிகளும் இன்னொரு அறையில் உள்ளனர். மற்ற கைதிகள் யாரும் இவர்களை பார்க்க முடியாது. இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு உள்ள பகுதியாகும். ஓட்டல் அதிபர் ராஜகோபால் பற்றி ஜெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தொடர்ச்சி.......

கொலைகாரி "சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை

இலங்கை ராணுவம் ராக்கெட் வீச்சு 25 சிறுவர்கள் உள்பட 102 அப்பாவி தமிழர்கள் பலி

Sunday, March 15, 2009

தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை : கருணாநிதி

முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பிறகு முதன்முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வர் கருணாநிதி தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

கேள்வி:தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தீர்களா? அங்கிருந்து ஏதாவது தகவல் வந்ததா?.

பதில்:நான் அழைப்பு ஏதும் விடுக்கவில்லை. தமிழகத்தில் சில பத்திரிகையாளர்களே சேர்ந்து கூட்டணியை உருவாக்குகிறார்கள். அவர்களே, அதை உடைக்கிறார்கள். பின்னர் மீண்டும், இணைக்கிறார்கள்.

கே:நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவும்-காங்கிரஸýம் கூட்டணியை இறுதி செய்து விட்டதா?

ப:"இறுதி' என்று கேட்கக் கூடாது. "உறுதி' செய்து விட்டதா என்றுதான் கேட்க வேண்டும். உறுதியாகத் தான் இருக்கிறோம்.

கே:திமுக அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளன?

ப:விரைவில் தெரியும்.

கே: பாமகவில் இருந்து உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

ப:பாமகவில் இருந்து யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் தொடர்பு கொண்டு பேசவில்லை.

கே:குலாம் நபி ஆசாத் கூறும்போது, பாமக தலைவர் ராமதாசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். திமுக தரப்பில் இருந்து நீங்கள் ராமதாசுடன் பேசுகிறீர்களா?

ப:பாமக தரப்பில் இருந்து பேசுவதாக சிலர் வந்து பேசுகிறார்கள். அது ஊர்ஜிதமானது அல்ல.

கே: பாமக எங்களது அணியில்தான் உள்ளது. அதைப் பிரித்துப் பார்க்காதீர்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியுள்ளாரே?

ப:தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அக் கட்சிகளின் தலைவர்கள் முயற்சிப்பதும், அதற்கேற்ப பேசுவதும் இயல்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்களுக்கு உகந்த பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கே: 3-வது அணி குறித்து...?

ப:3-வது கண் போன்றது.

கே:வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

ப:எங்களது எண்ணமும் அப்படித்தான் உள்ளது.

கே:திமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும்?

ப:இப்போதுதான் காங்கிரஸ் குழுவினருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். எந்தெந்த தொகுதிகள் என்று இன்னமும் வரையறுக்கப்படவில்லை. அப்படி வரையறுக்கப்பட்டால், அது அடுத்த கட்சிகளுடன் பேசுகின்ற நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். இனி, தொடர்ந்து நடக்க உள்ள பேச்சுகளில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்பதைப்பற்றி மட்டுமே முடிவு செய்ய இருக்கிறோம். அந்தத் தொகுதிகளின் பெயர்கள் எவை என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கே:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உங்களது அணியில் தொடர்ந்து நீடிக்கிறாரா?

ப:அவர் ரொம்ப காலமாக எங்களது அணியில்தான் உள்ளார். சமத்துவம், ஜாதி மறுப்பு, பொது உடைமைக் கொள்கை ஆகியவற்றில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இல்லை.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். இலங்கைப் பிரச்னையில், நடைமுறைப்படுத்துவதில் சில வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்களைப் பாதுகாப்பதிலும், அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதிலும், அதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு, சமநிலை ஆகியவை வேண்டும் என்று வலியுறுத்துவதில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் உள்ள ஒற்றுமையை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எந்தவித மாற்றமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கிடையாது என்பதால் அடித்தட்டு மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் எங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.

கே: வழக்கறிஞர் போராட்டத்துக்கு தீர்வு என்ன?

ப: இப்போது, அப் பிரச்னை வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்னையாக மாறிவிட்டது.

கே:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே?

ப:அது எப்போதும் வழக்கமாகச் சொல்வதுதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அவர் சொல்வது தான்.

கே:பாமக தரப்பில் இருந்து ஒரே நேரத்தில் திமுக அணியுடனும், அதிமுக அணியுடனும் பேச்சு நடத்தப்படுவதாக "மீடியா' செய்திகள் தெரிவிக்கின்றனவே?

ப:அது, "மீடியா' செய்தி அல்ல! "மீடியேட்டர்கள்' (இடைத்தரகர்) கொடுக்கும் செய்தி.

கே:பாமக இறுதியாக திமுக அணிக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

ப:நம்பிக்கைதான் மனிதர்களின் வாழ்க்கை லட்சியம். அது அரசியலுக்கும் பொருந்தும். எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றார் கருணாநிதி.

ராக்கிங் : இளம்பெண்ணை நிர்வாண நடனம் ஆட வற்புறுத்திய 4 மாணவிகள் கைது

தேர்தலில் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

Friday, March 13, 2009

தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? கருணாநிதி பதில்

"நல்ல செய்தி எங்கிருந்து எப்போது வந்தாலும் வரவேற்போம்' என்று தனது தலைமையிலான கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார் முதல்வர் கருணாநிதி.

கேள்வி:- நீண்ட நாட்களுக்கு பிறகு அலுவலகத்திற்கு வந்திருக்கிறீர்கள், இன்றைக்குக் என்னென்ன காரியங்களை கவனிக்கப் போகிறீர்கள்?

பதில்:- தலைமைச் செயலாளரில் இருந்து எல்லா துறை அதிகாரிகளையும் தலைமைச் செயலகத்துக்கு வந்து தான் பார்க்கவில்லை. ஆனால், மருத்துவமனையில் இருந்த போதும், வீடு திரும்பிய பிறகும் எந்த அதிகாரிகளையும் சந்திக்காமல் இல்லை. அவர்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன். அவர்கள் தெரிவிக்கும் விவரங்களின் அடிப்படையில் விவாதித்து, அரசின் சார்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி:- கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் எந்த நிலையில் இருக்கின்றன?

பதில்:- திமுக, காங்கிரஸ் சார்பாக இரண்டு குழுக்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், அந்த இரண்டு குழுக்களும் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன.

கேள்வி:- திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நல்ல செய்தியை விரைவில் அறிவிப்போம் என காங்கிரஸ் கூறுகிறது. அப்படி வந்தால் வரவேற்பீர்களா?

பதில்:- நல்ல செய்தி எங்கிருந்து எப்போது வந்தாலும் வரவேற்போம்.

கேள்வி:- மதிமுகவில் இருந்து விலகிய கண்ணப்பன், உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவமனையில் விசாரித்தது சர்ச்சையாகி இருக்கிறதே?

பதில்:- தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை, அரசியல் பண்பாடு, அரசியல் நாகரிகம் ஆகியன எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம்.

கேள்வி:- மூன்றாவது அணி, நான்காவது முறையாக அமைந்திருப்பதைப் பற்றி?

பதில்:- நான்காவது முறையாக உருவாகியுள்ள மூன்றாவது அணி என்று செய்தி போடலாம்.

கேள்வி:- கூட்டணியில் சேர்வது பற்றி பாமகவிடம் இருந்து ஏதாவது செய்தி வந்ததா?

பதில்:- அவர்கள் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.

கேள்வி:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியிருக்கிறதே?

பதில்:- திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் இப்போது தான் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்து இருக்கின்றன. இதன் முன்னேற்றத்தில், உங்களுடைய (பத்திரிகையாளர்கள்) ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறலாம்; நிறைவேறாமல் போனாலும் போகலாம்.

கேள்வி:- உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பாததால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே?

பதில்:- தமிழகத்தில் வழக்கறிஞர்களே நீதிமன்றங்களை மதிக்கவில்லை என்றால், அதன் பிறகு என்ன இருக்கிறது என்று சாதாரண மக்களே சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நான் அவ்வளவுதான் சொல்ல முடியும்'' என்றார் கருணாநிதி. மேலும்.......

போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

கேரள கம்யூ., கூட்டணியில் பிளவு

Thursday, March 12, 2009

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை

சென்னை அண்ணா நகரில் தொழிலதிபர் வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 13-வது தெருவில் வசிப்பவர் அசோக்குமார் மல்பானி (58). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், பாரிமுனை பகுதியில் அலுமினிய மூலப் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக தொழில் செய்துவருகிறார்.

இது தவிர தங்கம், வைர நகைகளையும் வாங்கி விற்று வந்தார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கதவைத் திறந்துக் கொண்டு புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே புகுந்துள்ளது.

: இக் கும்பல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசோக்குமார், அவரது மனைவி லத்தா வாட்டிகா (55), வேலைக்காரர் பச்சன் ஆகியோரை துப்பாக்கி, கத்தி முனையில் மிரட்டியது. இவர்கள் மூவரையும் கட்டிப் போட்டு, வாயில் துணிகளை அடைத்து மயக்க மருந்தை தெளித்துள்ளனர். இதனால் அசோக் குமார் உள்ளிட்ட 3 பேரும் மயக்கமடைந்தனர்.

அசோக் குமாரின் படுக்கை அறையில் இருந்த சாவிக் கொத்தை எடுத்து, பீரோ, லாக்கர் அறையைத் திறந்துள்ளனர்.

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க, வைர நகைகள், தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை இக் கும்பல் கொள்ளையடித்தது.

இதன்பின் அதிகாலையில் மயக்கம் தெளிந்த அசோக்குமார் தன்னை கயிற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு மற்றவர்களையும் விடுவித்தார். இதன்பின் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் ரவிக்குமார், அண்ணா நகர் துணை கமிஷனர் அன்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மயக்க மருந்தால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து காணப்பட்டதால் போலீசாரிடம் இவர்கள் கொள்ளையர்கள் குறித்து முழுமையாகத் தகவல் தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஏசுநேசர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயின் உதவியுடன் துப்பு துலக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. முகமூடி அணிந்த இவர்கள், வீட்டின் வேறு எந்த அறைக் கதவு, பூட்டையும் உடைத்து சேதப்படுத்தவில்லை.

கொள்ளை கும்பலுக்கும், வீட்டு வேலைக்காரர் பச்சனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகள்


பாகிஸ்தான் அதிபர் சர்தாரி எங்கே?

Wednesday, March 11, 2009

"நான் உண்ணாவிரதம் இருந்ததும் இலங்கைக்கு மருத்துவ குழு பயணம்'' ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு கருணாநிதி பதில்

நான் உண்ணாவிரதம் இருந்ததும் இலங்கைக்கு மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு நகைச்சுவையாக உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிவித்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசர அவசரமாக அனுப்பியுள்ளது''- என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா - 2008-ம் ஆண்டு போர் தீவிரம் அடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டில் இருந்து தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009-ம் ஆண்டிலே தானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.

அது மாத்திரம் அல்ல. ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

"வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்தது, அதன் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்கள் என் தலைமையில் தில்லி சென்று பிரதமரைப் பார்த்தது, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது, சட்டப் பேரவையில் "இறுதி வேண்டுகோள்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார். அதன்பின், 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எல்லாமே எப்படி நடந்தது? அவருடைய உண்ணாவிரதத்துக்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா?

அரிசி, பருப்பு, படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை தனித்தனி சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?

"அவரது உண்ணாவிரதத்தால் நான் கதி கலங்கிப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். ஆம். கதி கலங்கித் தான் போய் விட்டேன். தனது உண்ணாவிரதத்துக்கு உலக அளவில் வரவேற்பாம். முதலில் இப்படித் தான் தனக்கு உலக அளவில் விருது கொடுப்பதாக புரளியைக் கிளப்பினார்.

ஏதோ, இரண்டு இடங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைப் புலிகள் பற்றி ஜெயலலிதாவுக்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணாவிரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதி கலங்கி விட்டேனாம். என் செய்வது? ``கதாநாயகி நடிகை'' காமெடி நடிகையாக ஆகிவிட்டார்! கஷ்ட காலம்!

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது. இந்த உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல், ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு உண்டியல் வசூல் செய்துள்ளார்.

எப்படியோ போகட்டும். தமிழக அரசின் சார்பாக தொகையாகக் கூட அல்ல; வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறை தானா? என்று தான் கேட்டிருந்தேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். மேலும்.......

பாகிஸ்தானில எதிர்க்கட்சி தலைவர்கள் கூண்டோடு கைது: இம்ரான்கான் தலைமறைவு


வைகோவுடன் மோதல்: ம.தி.மு.க.வில் இருந்து மு.கண்ணப்பன் விலகினார்

Tuesday, March 10, 2009

உண்ணாவிரதம் இருந்ததால் இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியது மத்திய அரசு: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தால்தான் இலங்கைக்கு மருந்துகள், மருத்துவர்களை மத்திய அரசு அனுப்பியது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எங்கள் உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்களை சுட்டிக்காட்டி, "அதிமுகவினருக்கு கருணாநிதி மீதுதான் கோபம். சிங்கள அரசு மீதோ, மத்திய அரசு மீதோ கோபம் இல்லை' எனக் கருணாநிதி கூறியுள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு தவறு செய்து இருக்கிறது என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசை, கருணாநிதி தட்டிக் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாததால், கருணாநிதி ஆட்சி குறித்து உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்கள் மிகவும் பொருத்தமானவையே.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக அரசு சார்பில் காசோலையாக மட்டுமே பெறப்பட்டது என கருணாநிதி கூறியுள்ளார்.

எங்கள் உண்ணாவிரத மேடையில் உண்டியலில் பணம் போட்டவர்களெல்லாம் அ.தி.மு.க.வினர், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநர்கள், தினக் கூலிகள், ஏழை, எளியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள். அவர்களெல்லாம் தங்களால் இயன்ற ஒரு ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் என உண்டியலில் செலுத்தினார்கள்.

எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.5 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.1 கோடியும் வழங்கியிருக்கிறேன். தோழமைக் கட்சியினரும் நிதி வழங்கினார்கள்.

உண்டியல் மூலம் வசூலான தொகை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்த பணத்துக்கும் வரைவோலை எடுக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும்.

கருணாநிதி அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கிறார். எனவே அவரை சந்தித்து பெரிய தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரைப்படத் துறையினர் காசோலை மூலம் நிதி அளிப்பார்கள். ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், அத்தகையவர்கள் எங்களிடம் நிதி அளிக்க தற்போது முன்வர மாட்டார்கள்.

கருணாநிதி இவ்வாறு கூறுவதற்கு, இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி போயிருப்பதே காரணம்.

"இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது'' என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

என்னுடைய அறிக்கையை சரியாக படிக்காமல் வழக்கறிஞர் மூலம் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

காங்கிரசும், திமுகவும் இணைந்த மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக வாய் திறக்கவில்லை. இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வந்தது. 2008-ல் போர் தீவிரமடைந்தபோதும் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த 9-ம் தேதி நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதை அறிந்து, அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்காக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசர அவசரமாக மத்திய அரசு அனுப்பியுள்ளது.

எது எப்படியோ, நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது மத்திய அரசு உதவியிருப்பதில் மகிழ்ச்சியே.

இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கின்றனர். கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோர் மட்டும் குறை கூறுகின்றனர்.

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர். இந்த இருவர் மட்டும் எனது உண்ணாவிரதத்தை குறை கூறுவது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே இலங்கைத் தமிழர்களின் எதிரி யார் என்பது தெளிவாகிறது.

இதனால்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசையும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும் இலங்கைத் தமிழர்களின் எதிரி என்று நான் குறிப்பிடுகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும்.......


தி.மு.க. வக்கீல்கள் அவசர ஆலோசனை


இலங்கையில் `மனித வெடிகுண்டு' தாக்குதலில் 15 பேர் பலி

Monday, March 9, 2009

ஜெயலலிதா உண்ணாவிரதம் தேர்தல் நாடகம் : கருணாநிதி

மக்களவைத் தேர்தல் வந்துவிட்ட காரணத்தால், இலங்கை மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கரிசனம் காட்டுகிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஓர் அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபர் 15-ல் ஜெயலலிதா வெளியிட்டார். "இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்தியா தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது' என்று அந்த அறிக்கையில் முழங்கினார்.
மேலும்.......


சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை


இலங்கை அமைச்சரானார் கருணா

Sunday, March 8, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜெயலலிதா இன்று சென்னையில் உண்ணாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் ஜெயலலிதா மாலை 5 மணிக்கு முடிக்கிறார். இதற்காக உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் அமர்ந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

மேலும் தொண்டர்கள் உட்காருவதற்கு வசதியாக பந்தல் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உண்ணாவிரதத்தின் போது இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத மேடையில் அதற்காக தனியாக உண்டியல் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த உண்டியலில் ஜெயலலிதா முதலில் நிதியை அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு ம.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தை வரவேற்பதாக கூறியுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் துணை கமிஷனர் கணேசமூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும்.......

பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நடனத்துடன் மது விருந்து: 110 பேர் கைது


போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி புதன்கிழமை முடிவு எடுக்கப்படும் வக்கீல் சங்க தலைவர்கள் அறிவிப்பு

Saturday, March 7, 2009

கூட்டணியில் "சிண்டு'' முடிய ஜெய‌ல‌லிதா முயற்சி : கருணா‌நி‌தி

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க. செயல்பட்ட சில நிகழ்ச்சிகளையெல்லாம் ஜெய‌ல‌லிதா எடுத்துக் கூறி, ‌எ‌ங்க‌ள் அணியிலே "சிண்டு'' முடிய முயற்சி செய்திருக்கிறார் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நீண்ட கால நட்பைப் பற்றி நமக்குத் தெரியாதா எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, காங்கிரசை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பது தன்னுடன் கூட்டு சேருவதற்காக முதலிலே வந்து பேசிய இடதுசாரி கட்சிகளை ஏமாற்றுவதற்காகத் தானா? எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று எழுதியுள்ள கடிதத்தில், 5.3.2009 தேதியிட்டு ஜெயலலிதா பெயரில் வெளிவந்த இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் "அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரசை அழைக்கவில்லை'' என்று ஜெயலலிதா தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்தச் செய்தியிலும் என்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து, "கருணாநிதி, தனது அறிக்கையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு நான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அ.தி.மு.க.விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்ட கால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர, எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு காங்கிரசுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார் என்று நான் எனது அறிக்கையிலே கூறியதாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியிருப்பது உண்மை தானா? மேலும்.......

இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பலி

ஜெயலலிதா உண்ணாவிரதம் மார்ச் 9-க்கு மாற்றம்

Friday, March 6, 2009

Thursday, March 5, 2009

ஆந்திராவில் அடிக்குது யோகம். இலவச கலர் டெலிவிஷன்-மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம்

ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் மற்றும் மாதந்தோறும் ரூ.1000 முதல் 2000 வரை ரொக்கப்பணம் வழங்குவோம் என்று, தெலுங்குதேசம் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியின் `பிரஜா ராஜ்யம்' கட்சிகளுடன் தெலுங்கு தேசம் கட்சியும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தெலுங்குதேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு, மாதிரி தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும். அத்துடன் ஏழை குடும்ப தலைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை மாதந்தோறும் ரொக்கப்பணம் வழங்கப்படும். பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும், ஏழைகளுக்கு ரூ.1500-ம், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்தலைவியின் பெயரில் இந்த பணம் வங்கியில் செலுத்தப்படும். `ஏ.டி.எம்.' கார்டுகள் மூலம் மாதந்தோறும் அவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஏழை குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்காக இந்த பணம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு ரொக்கப்பணம் வழங்கும் இந்த திட்டம் சாத்தியமானதுதான். பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, சிலி உள்பட 30 நாடுகளில் இதுபோன்ற திட்டம் நல்ல பயனை அளித்து இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்து வரும் ஏழை மக்களுக்கு இலவச டி.வி. நல்ல பொழுதுபோக்காக இருப்பதுடன் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த திட்டம் அமலில் இருப்பதால், ஆந்திராவிலும் இலவச டி.வி. வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான். அத்துடன் மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும் தங்கள் கோரிக்கை தொடர்பான பல்வேறு யோசனைகளை செல்போன் மூலம் தனக்கு தெரிவிக்கலாம் என்றும் பேட்டியின்போது அவர் தெரிவித்தார். மேலும்.......


கட்சி மாறுகிறார் கண்ணப்பன்?


நான் ஓய்வு பெறுவேன் என்று கனவு காண்பது நடக்கவே நடக்காது ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஜெயலலிதா

அதிமுக கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் அழைப்பு விடுத்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

''மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் சேருமாறு காங்கிரஸ் கட்சிக்கு நான் எப்போதும் அழைப்பு விடவில்லை. திமுகவின் புதைகுழியில் சிக்க வேண்டாம் என்று பழைய நட்பின் அடிப்படையில் காங்கிரசுக்கு அறிவுரை கூறினேன். வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலுக்குப் பின்னரே இதை காங்கிரஸ் கட்சி உணரும்'' என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்.......

சென்செக்ஸ் கடும் சரிவு

லாகூர் தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பா?

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

லாகூரில் தாக்குதல் நடத்தியவர்களுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் திலீபன் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்களா என அவரிடம் கேட்டதற்கு, நாங்கள் அதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். தங்களுடன் 3,50,000 மக்கள் வசித்து வருவதாகக் குறிப்பிட்ட திலீபன், நான்கு கிராமங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்றார்.

தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட திலீபன், உணவுப் பற்றாக்குறை காரணமாக இரு பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் தங்களுடன்தான் வசித்துவருகிறார் என்றும் திலீபன் அந்த பேட்டியின்போது தெரிவித்தார். மேலும்.......



இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்

Wednesday, March 4, 2009

கடப்பாரையால்அடித்து கணவனை கொலை செய்த மனைவி கைது

கடப்பாரையால் அடித்து கணவனை கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுபட்டியை சேர்ந்தவர் மொக்கைராஜ்(வயது 41). இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மொக்கைராஜ் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வாராம். சம்பவத்தன்றும் மொக்கைராஜ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராணி, தனது கணவர் மொக்கைராஜின் தலையில் கடப்பாரையால் அடித்து உள்ளார்.

இதில் நிலைகுலைந்த மொக்கைராஜ் அதே இடத்தில் இறந்து விட்டார். இதனால் பதறிப்போன செல்வராணி, இந்த கொலையை மறைப்பதற்காக போதையில் வந்த தனது கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இருந்த போதிலும் மொக்கைராஜின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் செல்வராணியை அழைத்து விசாரித்தனர். அப்போதும் அவர் நடந்த சம்பவத்தை மறைத்துள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாத செல்வராணி, தனது கணவரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். குடித்து விட்டு வந்த தனது கணவரை கடப்பாரையால் அடித்ததில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாகவும், அதை மறைக்க தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு செல்வராணியை போலீசார் கைது செய்து உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்.......

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா நியமனம்

தமிழக தேர்தல் அதிகாரிக்கு கருணாநிதி கண்டனம்

Tuesday, March 3, 2009

அமெரிக்காவில், வேலை இழந்து அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள்

அமெரிக்காவில் வேலை இழந்து அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பம் படித்த ஆட்கள் சரிவர கிடைக்காததால் இந்தியா, சீனா நாடுகளை அமெரிக்கா பெரிதும் நம்பி இருந்தது. இப்போது பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், பல நிறுவனங்கள் லாபம் குறைந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு அமெரிக்கர்கள் தான்.

இதனால் அமெரிக்க மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி, திறமையான மாணவர்களை உருவாக்கி அவர்களை வெளிநாட்டு பணியாளர்களுக்கு மாற்றாக கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. அப்படி அவர்கள் வரும்போது இந்தியர்கள், சீனர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டியூக், ஹார்வர்டு, பெர்க்கிலி ஆகிய பல்கலைக்கழகங்களில் படித்து வரும் 1203 இந்தியர்கள் மற்றும் சீனர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியரான விவேக் வாத்வா தலைமையில் நடந்த இந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள்.......

சென்னை தி.நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

காந்திஜியின் பொருள்களை ஏலம் விட தில்லி உயர்நீதிமன்றம் தடை

ஈழத்துப் பாப்பா பாடல் - நெப்போலியன் இளம்வழுதி

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா

மனம் மலரட்டும்...

மேலும்.......

இலங்கை வீரர்கள் சமாரவீராவும், பிரணவிதனாவும் அபாயகட்டத்தை தாண்டினர்.





லாகூர் மைதானத்திற்கு பேரு‌ந்‌தி‌ல் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது மைதானத்திற்கு அருகே முகமூடி அணிந்த 2 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர், சமாரவீராவுக்கும், பிரணவிதனாவுக்கும் மார்பில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் லாகூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.


பாகிஸ்தானிற்கு கிரி‌க்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அ‌ணி இரண்டாவது டெஸ்‌ட் 3வது நா‌ள் ஆ‌ட்ட‌த்‌தி‌ற்காக லாகூர் கடாஃபி மைதானத்திற்கு இ‌ன்று காலை பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.



அப்போது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் பேருந்தை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் பேருந்திற்கு காவலாக வந்த ஐந்து காவலர்கள் உயிரிழந்தனர்.



மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திலான் சமரவீரா, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சமாரவீராவுக்கும், பிரணவிதனாவுக்கும் மார்பில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் லாகூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும், 25 நிமிடங்கள் வரை தாக்குதல் நீடித்ததாகவும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முகமூடியும், குண்டு துளைக்காத உடையும் அணிந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கையெறிகுண்டுகள் மற்றும் நவீனரக ராக்கெட் லஞ்சர் ஆகியவற்றை பயங்கரவாதிகள் இத்தாக்குலில் பயன்படுத்தியுள்ளனர்.




இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து காவல்துறையினருக்கு ஏற்கனவே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே இன்று கிரிக்கெட் வீரர்கள் மாற்று வழியில் மைதானத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



மாற்று வழியில் அழைத்து வரப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை உறுதி செய்துள்ளது.



தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமரவீரா மார்பில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.



காயமடைந்த 6 வீரர்களும் இப்போது நலமுடன் இருப்பதாகவும், காயங்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.



அனைவரும் உடனடியாக பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் திரும்புகின்றனர். மேலும்.......

Monday, March 2, 2009

டாலரின் வெளிமதிப்பு மேலும் அதிகரித்தால் நாட்டின் பங்கு வர்த்தகம் பாதிக்கும்

இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டின் பங்கு வர்த்தகம் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும், பங்கு வர்த்தகத்திற்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு டாலரின் வெளிமதிப்பு ரூ.39.42-ஆக குறைந்து இருந்தபோது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 20,869 புள்ளிகளாக இருந்தது. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு டாலரின் மதிப்பு ரூ.50.52-ஆக உயர்ந்தபோது `சென்செக்ஸ்' 8,451 புள்ளிகளாக குறைந்தது. மேலும்.......


குஜராத்தில் ஒரு வாக்காளருக்காக தனி வாக்குச்சாவடி

கோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் செல்லக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை : ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கம்.

சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில், நீதிக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற நியதிக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் ஐகோர்ட்டில் மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீசார் சட்டப்படி கைது செய்ய வந்தபோது சில வக்கீல்கள் எதிர்த்தனர். மேலும் அவர்கள், போலீசார் தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தனர்.

கடந்த 19-ந் தேதி அன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களும், வக்கீல்கள் என்ற போர்வையில் சிலரும் சட்டவிரோதமாக கூடி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்கள் மீது செங்கல், கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. மேலும்.......


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகம், புதுவையில் மே 13-ல் வாக்குப் பதிவு


ஐகோர்ட்டு மோதல் சம்பவம்: வக்கீல்கள் 6-வது நாளாக கோர்ட்டை புறக்கணித்து உண்ணாவிரதம்

Sunday, March 1, 2009

சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை: இளையராஜா

சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை என்றார் இளையராஜா.

"ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்த் திரைப்பட இசை உலகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள தமிழ்த்திரை இசை அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ் விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், இயக்குநர் பாலசந்தர், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

இளையராஜா:

ரஹ்மானுக்கு எந்தப் பாராட்டு விழா நடந்தாலும் இன்றைய விழா போன்று நடக்காது. தங்கக் கிரீடமே சூட்டலாம். இருந்தாலும், இந்த இசைக் குடும்பத்தின் பாராட்டுகள் தான் முக்கியம்.

தேர்வுக்குழு தேர்வு செய்யும் படங்கள் மட்டுமே ஆஸ்கர் போட்டிக்குப் போகின்றன. அப்படிப்போன படத்துக்குத்தான் இப்போது விருதுகள் கிடைத்துள்ளன.

இசை அமைப்பாளர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதுக்கு மதிப்பில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன்:

மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை மதித்தால் நல்ல இசை வரும். இங்குள்ளவர்களின் ரசிகன் நான். எல்லோருடைய பாராட்டுகளையும் கேட்டுவிட்டு அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவேன். எனக்கு விருதுகள் வேண்டாம். மக்களின் அன்பு போதும். இங்கு உள்ளவர்கள் புகழ் அடையும்போது முதலில் சந்தோஷப்படுவதும் நான்தான். ரஹ்மானின் குடும்பத்தைவிட அதிகம் சந்தோஷம் அடைந்தது நான் தான்.

பாலமுரளி கிருஷ்ணா:

புராண காலங்களில் இசையில் புதுமையை உருவாக்கியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கடவுள் அனுமான். இப்போது ரஹ்மான். அவரைப் பற்றிப் புகழக் கூடாது. ஏனென்றால் அப்பா மகனைப் புகழ மாட்டார். மனதுக்குள் சந்தோஷப்படுவார். ஆஸ்கர் விருது வந்த பிறகு இதைவிட வேறு ஏதாவது விருது வருமென்றால் அதுவும் ரஹ்மானுக்குத்தான்.

ஏ.வி.எம்.சரவணன்:

இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது நல்ல விஷயம். இந்த ஒற்றுமை கடைசி வரை நீடிக்க வேண்டும். ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் தமிழில் பேசியது தமிழர்களாகிய நமக்குப் பெருமையான விஷயம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை உலகில் கடந்த 70 ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார். ஆனால் அவரது சாதனை முழுமையாக மதிக்கப்படவில்லை. ஒரு பத்ம பூஷண் விருதாவது கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. இதுபோன்று பாலமுரளி கிருஷ்ணா, ஆரூர்தாஸ் போன்ற நிறையக் கலைஞர்களின் சாதனைகள் மதிக்கப்படாமலேயே இருக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லத்தான் இதை இங்கு கூறுகிறேன்.

விழாவில் ஏற்புரை வழங்கி ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:

ஆஸ்கரை வாங்குவதற்கு அப்பாவின் ஆசிதான் காரணம். அவரின் கஷ்டத்தைத்தான் நான் அறுவடை செய்திருக்கிறேன். சிறுவயதில் ஜப்பானியர்களும், சீனர்களும் ஆஸ்கர் விருதுகளை வாங்கும்போது, இந்தியனுக்குத் தகுதி இல்லையா என யோசிப்பது உண்டு. "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் மொத்த இசையையும் மூன்று வாரங்களில் முடித்து விட்டேன். அப்போது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. படத்தைப் பார்த்த பிறகு நன்றாக வந்திருந்தது. எல்லோருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். யாருடனும் என்னை ஒப்பிட வேண்டாம் என்றார். மேலும்.......


'கருணாநிதிக்கு உச்ச நீதிமன்றம் நெற்றியடி': ஜெயலலிதா


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நீடிக்கும் வக்கீல் சங்கத் தலைவர்கள் அறிவிப்பு
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...