Sunday, August 30, 2009

கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவியை கற்பழித்த பள்ளிக்கூட அதிபர்

வடமாநிலத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் நடைபெற்றுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் அவை பள்ளிக்கூடங்களா? சித்தரவதைக் கூடங்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவியை பள்ளிக்கூடத்திலேயே, பள்ளிக்கூட அதிபர் கற்பழித்தார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள மகாராஜா செகண்டரி பள்ளிக்கூடம், ரமேஷ் சைன் என்ற தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 14 வயதான பெண் 6-ம் வகுப்பில் படித்து வருகிறார். மேலும் படிக்க

Friday, August 28, 2009

நான் தற்கொலைக்கு முயன்றேனா? ரம்பா ஆவேசம்

நான் தற்கொலைக்கு முயன்றதாக 2 நடிகைகள் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்கள் என்றும், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்றும் நடிகை ரம்பா ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுபற்றி ரம்பா மேலும் கூறுகையில்,

எப்போதும் போல காலையில் ஒரு நாள் என் வீட்டில் சாப்பிட்டு விட்டு, ஷீட்டிங் இல்லாததால் படுக்க சென்று விட்டேன். அந்த சாப்பாடு அன்று பாய்சன் ஆகி வாந்தி எடுத்தேன். பின்னர் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று குணம் அடைந்தேன். மேலும் படிக்க

மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கிட்னியை விற்கும் வாலிபர்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் சமீபத்தில் தன் கணவரிடம் இருந்து பிரிய கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழலாம். மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ஜீவனாம்சமாக 8 ஆயிரம் ரூபாயை கணவன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மனைவியிடம் இருந்து விடுதலை பெற்ற அந்த நபர் கடந்த சில மாதங்கள் மட்டுமே மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தார். அதன் பிறகு அவரால் பணம் புரட்ட இயலவில்லை.

3 ஆயிரத்து 600-க்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்கும், அந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் புரட்டி முன்னாள் மனைவிக்கு கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
மேலும் படிக்க

Wednesday, August 26, 2009

52 வயது நவரத்திலோவா 36 வயது தோழியை திருமணம் செய்கிறார்

பெண்களை பெண்களும், ஆண்களை ஆண்களும் திருமணம் செய்து கொள்ளும் கலாச்சரம் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இது பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது, இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவின் படி குற்றமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ஓரின சேர்க்கை சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவும் இந்த வகையை சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடிய காலத்திலும், ஓய்வுக்கு பிறகு பல பெண்களுடன் லெஸ்பியன் தொடர்பு வைத்து இருந்தார். மேலும் படிக்க

Thursday, August 20, 2009

ஸ்ரீதேவியின் மகளும் நாயகி ஆகிறார்

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியான நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜானவி நடிகையாகிறார் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்சினேனிக்கு ஜானவியை ஜோடியாக்க ஸ்ரீதேவி முடிவு செய்துள்ளார். ஜானவி முகத்தில் குழந்தை தனம் தெரிகிறது.மேலும் படிக்க

Sunday, August 16, 2009

கணவனை செக்ஸ் பட்டினி போட்டால்.....?

ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கணவன் பட்டினி போடலாம், பணம் கொடுக்க மறுக்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அந்த பெண்கள் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமை குழந்தைகளின் தந்தைக்கும், தாத்தாக்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கணவர்களின் அனுமதியை பெறவேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க

Wednesday, August 12, 2009

பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி?

பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களுக்கு “தமி புளூ” என்ற மாத்திரை கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு மருந்துகள் இல்லை.

பன்றிக் காய்ச்சல் இருக்கிறது என்பதற்காக இந்த மாத்திரையை நாமே மருந்து கடைக்கு சென்று சாப்பிட கூடாது. இந்த மாத்திரையால் பல பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டாக்டர் ஆலோசனை பெற்றே இந்த மருந்தை சாப்பிட வேண்டும்.

நோய் தாக்கிய 48 மணி நேரத்தில் “தமிபுளூ” மாத்திரையை சாப்பிட ஆரம்பித்து விட வேண்டும். இது மாத்திரை வடிவத்திலும், குழந்தைகளுக்காக திரவ மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது.

“தமிபுளூ” மாத்திரை பன்றிக் காய்ச்சல் கிருமியை நேரடியாக கொல்லாது. கிருமி உடலில் மேலும் பரவாமல் மட்டுமே தடுக்கும். இதன் மூலம் கிருமிகள் கட்டுப்பட்டு நோய் குணமாகி விடும். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கே இந்த மாத்திரையை கொடுக்க வேண்டும். மேலும் படிக்க

Monday, August 3, 2009

`எய்ட்ஸ்' விளம்பர படத்தில் இடம் பெற்ற பெண், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

எய்ட்ஸ்? கட்டுப்பாடு பிரசார விளம்பரத்தில் அனுமதி இல்லாமல் எனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த திலகவதி (வயது 25) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது. கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க

கே.கே.நகரில் 3 பேர் கொலை: கொலையாளியான காங்.பிரமுகரை காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்?

சென்னை கே.கே.நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகிய 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் சொத்து ஆவணங்களை கொலையாளிகள் கொள்ளையடித்து சென்றனர்.

தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில்தான் கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டது என தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரையும் அவர் ஏவிய கூலிப்படை கும்பலையும் போலீசார் சுற்றி வளைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். மேலும் படிக்க

Saturday, August 1, 2009

மணிரத்னம் படத்தில் மண்டோதரியாக நயன்தாரா?

ராமாயண' கதையை, ராவணன்' என்ற பெயரில் தமிழிலும், ராவன்' என்ற பெயரில் இந்தியிலும் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

தமிழில் உருவாகும் ராவணன்' படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். சீதாவாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இந்தியில் உருவாகும் ராவன்' படத்தில் ராமராக அபிஷேக்பச்சனும், சீதாவாக ஐஸ்வர்யாராயும் நடிக்கிறார்கள். இந்த படத்தில், ராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க மணிரத்னம் ஆசைப்பட்டார். மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...