Wednesday, August 12, 2009

பன்றி காய்ச்சலுக்கான “தமிபுளூ” மாத்திரையை பயன்படுத்துவது எப்படி?

பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களுக்கு “தமி புளூ” என்ற மாத்திரை கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு மருந்துகள் இல்லை.

பன்றிக் காய்ச்சல் இருக்கிறது என்பதற்காக இந்த மாத்திரையை நாமே மருந்து கடைக்கு சென்று சாப்பிட கூடாது. இந்த மாத்திரையால் பல பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டாக்டர் ஆலோசனை பெற்றே இந்த மருந்தை சாப்பிட வேண்டும்.

நோய் தாக்கிய 48 மணி நேரத்தில் “தமிபுளூ” மாத்திரையை சாப்பிட ஆரம்பித்து விட வேண்டும். இது மாத்திரை வடிவத்திலும், குழந்தைகளுக்காக திரவ மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது.

“தமிபுளூ” மாத்திரை பன்றிக் காய்ச்சல் கிருமியை நேரடியாக கொல்லாது. கிருமி உடலில் மேலும் பரவாமல் மட்டுமே தடுக்கும். இதன் மூலம் கிருமிகள் கட்டுப்பட்டு நோய் குணமாகி விடும். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கே இந்த மாத்திரையை கொடுக்க வேண்டும். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...