Friday, February 27, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணையதளம்இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கும் வசதியாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும்

Thursday, February 26, 2009

பி.எஸ்.என்.எல்.தொலைபேசி கட்டணங்கள் அதிரடி குறைப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசாகவும் குறைக்கப்படுவதாக டெல்லி மேல்-சபையில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.

`இந்தியா கோல்டன் 50' என்ற புதிய திட்டம் மூலம் பிரீ பெய்டு மொபைல் சந்தாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி நாளை (28-ந் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனிமேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது. மேலும்.......


இலங்கை : `சுடர் ஒளி' ஆசிரியர் வித்யாதரன் கைது


சுந்தர்.சி நடித்த `தீ' படத்திற்கு தடை

மாணவியை கற்பழித்த 2 மருத்துவ மாணவர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில்

கேரளா மாநிலம் கோட்டயத்தில், எஸ்.எம்.இ. என்ற தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஒருவரை மூத்த மாணவர்கள் `ராக்கிங்' செய்தனர். பாலியல் தொந்தரவு செய்து, பரிசோதனைக் கூடத்தில் வைத்து கற்பழித்தனர்.

3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் ரஞ்சித் வர்கீஸ், ஷெரீன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கே.சசிதரன் நாயர் தீர்ப்பளித்தார். மற்றொரு மாணவர் ஷாபிக் ïசுபுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் 3 பேரும் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மொத்த அபராத தொகை 45 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கல்லூரி முதல்வர் உள்பட 6 பேரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செய்திகள்....

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் தொடர்புடைய சென்னை போலீஸ் துணை கமிஷனர் திடீர் `சஸ்பெண்டு'

Wednesday, February 25, 2009

காசோலைகளை பெட்டிகளில் போட கட்டாயப்படுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு

வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே காசோலைகளை போடவேண்டும் என வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களால் பெட்டிகளில் போடப்படும் காசோலைகள் காணாமல்போவதாக புகார்கள் தொடர்ந்து வருவதையடுத்து ரிசர்வ் வங்கி அதிரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

பெட்டிகளில் போடப்படும் காசோலைகள் தொலைந்துபோவதாக வங்கிகளின் விசாரணை அதிகாரிகளுக்கு அதிக அளவில் புகார்கள் வரத் தொடங்கியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் காசோலைகளை வங்கி கவுன்ட்டர்களில் கொடுத்து அதற்கு அத்தாட்சியாக ரசீது பெற்று கைவசம் வைத்திருப்பது அவசியம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும்.......ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்


எம்.எல்.ஏ.க்களின் வாகன செலவுகளுக்காக கூடுதலாக மாதம் ரூ.15 ஆயிரம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

போர் நிறுத்தம் செய்யத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்த பிறகும், அதை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. விடுதலைப் புலிகள் முன்வந்த பிறகும் போரை நிறுத்த முடியாது என கூறும் இலங்கை அரசு மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். மேலும்.......

Tuesday, February 24, 2009

15 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்து இருந்த ஆசிரியைக்கு 10 மாத ஜெயில்

சிங்கப்பூரில் பள்ளிக்கூட ஆசிரியையாக இருப்பவர் ஒருவர், தன் மாணவனான 15 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்து இருந்தார். அவருக்கு 32 வயது ஆகிறது. திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாரான அவர், கடந்த 2007-ம் ஆண்டு 6-வது வகுப்பில் படிக்கும் தன் மாணவனுடன் உறவு கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் இந்த உறவை முறித்துக்கொள்ள அவர் விரும்பியபோது, அந்த மாணவனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் வன்முறையில் ஈடுபட்டான். மேலும்.......


தி.மு.க. அரசை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. மனு


நடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, அசின் உள்பட 71 பேருக்கு கலைமாமணி விருது

Sunday, February 22, 2009

ஸ்லம் டாக் படத்திற்கு 8 ஆஸ்கர் விருது : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள்

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இசையமைப்பு மற்றும் பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகள் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதை அமைப்பாளர் சிமோன் பியூபோய் படத்தின் திரைக்கதைக்கான விருதை பெற்றார்.

சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதை இந்தியாவின் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்துக்காக ரேசுல் பூக்குட்டி பெற்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங்குக்கான விருதையும்,சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் தட்டி சென்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் ஸ்லம்டாக் படத்துக்காக டேனி பாயில் வென்றுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது பெறும் 4வது இந்தியர் ரகுமான் . ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த ரகுமானுக்கு , வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும்.......

உண்ணாவிரதம் இருப்பேன் கருணாநிதி அறிவிப்பு

வழக்கறிஞர்கள் - போலீசார் பிரச்னையில், இணக்கம் ஏற்படாவிட்டால் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும்.......


தமிழக அரசை நீடிக்க விடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்


இன்று நடைபெறுவதாக இருந்த வக்கீல்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

கோவை மத்திய சிறையில் கலவரம் : 3 வார்டன்கள் உட்பட 8 பேர் படுகாயம்.

இன்று கோவை மத்திய சிறையில் ஏற்பட்ட கலவரத்தி்ல் 3 வார்டன்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று கோவை மத்திய சிறையில் திரைப்படம் காண்பிப்பது வழக்கம். அது போல் இன்றும் படம் திரையிடப்பட்டது. திரைப்படம் முடிந்து போகும் போது கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. கலவரத்தில் கைதிகளும் வார்டன்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 வார்டன்கள் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டன்களால் தாக்கப்பட்டு காயம்மடைந்த 5 கைதிகள் சிறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்.......
தடையை மீறி உயர்நீதிமன்றத்தில் நுழைய வழக்கறிஞர்கள் முடிவு.

Saturday, February 21, 2009

காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு : வக்கீல்கள் இன்று முடிவு

காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் முடிவை வழக்கறிஞர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

"சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸôர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வழிகளில், பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் குழு ஒன்று அமைக்கப்படும். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார் கனகராஜ்.மேலும்.......
புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயம்
நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படைத் தாக்குதல்: புலிகள் அறிவிப்பு

Friday, February 20, 2009

கொழும்பு துறைமுகத்தின் மீது புலிகளின் விமானப்படை தாக்குதல்கொழும்பு நகரின் மீது விடுதலைப்புலிகளின் 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு குண்டு வீசி தாக்கியதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் சுட்டதில் அந்த 2 விமானங்களுமே வெடித்துச் சிதறிவிட்டதாகவும் ராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது.

செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட "இசட்-143' ரக போர் விமானங்களில் விடுதலைப்புலிகள் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

அந்த 2 விமானங்களையும் மன்னாரில் உள்ள இலங்கை ராணுவத்தினர் ரேடார் உதவியுடன் பார்த்துவிட்டனர். உடனே கொழும்பிலும் நாட்டின் பிற நகரங்களிலும் உள்ள விமான எதிர்ப்புப் படைப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தத் தகவல் கிடைத்ததும் கொழும்பில் நகர விளக்குகளை அணைத்துவிட்டனர். வீடுகளிலும் விளக்குகள் எரியக்கூடாது என்பதற்காக நகரில் மின்சார சப்ளை உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. கொழும்பு நகரமே இருளில் மூழ்கியது. அதை "பிளாக்-அவுட்' என்று அழைப்பார்கள்.

அப்போது வானில் விமானங்கள் வருகின்றனவா என்று தெரிந்துகொள்ள "டிரேசர்-புல்லட்' என்று அழைக்கப்படும் சில விநாடிகளுக்கு மட்டும் வெளிச்சத்தைத் தரவல்ல வாணங்கள் வெடிக்கப்பட்டன. இரவு 9.30 மணிக்கு இரு விமானங்களும் தென்பட்டன. உடனே விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கின. அதே சமயம் வான் புலிகளும் குண்டுகளை வீசினர்.
மேலும்.......
சென்னை : ஐகோர்ட்டில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது
டைரக்டர் சீமான் சரண்

Thursday, February 19, 2009

சென்னை உயர் நீதிமன்ற கலவர காட்சிகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் போலீஸார் தடியடி நடத்தியதில் நீதிபதி உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.

தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாய உள்ளிட்ட நீதிபதிகள் போலீஸôருடன் சமாதானம் பேச வந்தனர். அவர்களை யார் எனத் தெரியாமல் போலீஸார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைப்படங்கள்.......

Wednesday, February 18, 2009

கைதானபிறகும் கம்பீரமாக நடந்து சென்ற வெட்கங்கெட்ட பெண் இன்ஸ்பெக்டர்.
சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கைது செய்து அழைத்து சென்றபோது அவர் பணிக்கு செல்வதுபோல் மிகவும் கம்பீரமாக நடந்து சென்றார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார்நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 18). இவரது கணவர் பெயர் மோகன். இவர், திருவான்மிïரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பமானதில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வயிற்றில் வளரும் குழந்தை தனக்கு சொந்தமானது இல்லை என்றும் மோகன் சண்டைபோட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் மோகன் சித்ரவதை செய்தார். ஜீவிதாவின் நகைகளையும் பறித்துக்கொண்டு வீட்டை விட்டும் விரட்டிவிட்டார்.

இதனால் ஜீவிதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா 8 மாத கர்ப்பத்தை சுமந்தபடி, வயிற்றை கையால் பிடித்துக்கொண்டு, கண்ணீரும், கம்பலையுமாக கடந்த 2-ந் தேதி அன்று அடையார் பெண் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து கதறி அழுதார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தார்.மேலும்.......

தங்கம் : ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது

பிரணாப்முகர்ஜியின் பதில் திருப்தி அளிக்க வில்லை : டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை : பிரபல ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை, கடைகள் அடைப்பு.

சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளான ஆர்.எம்.கேவி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களில் அதிரடியாக இன்று காலை 9 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஒரேநேரத்தில் சென்னை, திருநெல்வேலி கடைகளிலும், அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன. துணி வாங்க வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் கடைகளுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின் கடைகள் திறக்கப்படும் எனத்தெரிகிறது. இதனால் தி.நகர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.மேலும்.......

Saturday, February 14, 2009

இலங்கைப் பிரச்னை: ஜெனீவாவில் தமிழர் தீக்குளிப்பு

இலங்கை பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, ஸ்விட்சர்லாந்தில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் ஐரோப்பிய தலைமையக வளாகத்தில் பிரிட்டன் வாழ் இலங்கைத் தமிழர் தீக்குளித்து உயிரிழந்தார்.

ஐ.நா. வளாகத்தில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சதுக்கத்தில், வியாழக்கிழமை ஒருவர் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக போலீஸôரிடம் அந்த வழியாகச் சென்றவர்கள் கூறியுள்ளனர்.

போலீஸôர் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும், அவர் பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர் என்பதும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்ததாக ஜெனீவா நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் எரிக் கிராண்ட்ஜீன் தெரிவித்தார்.

இறந்தவர் லண்டனில் இருந்து வந்த முருகதாசன் (27) என்றும், இவர் இலங்கை பிரச்னை தொடர்பாக 7 பக்க மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்தார் எனவும் தெரியவந்துள்ளது.

இறந்த முருகதாசனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அந்தச் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர். மேலும் செய்திகள்.......

சரிந்த பொருளாதாரம் நிமிர சில ஆண்டுகள் பிடிக்கும்: அமெரிக்க அதிபர் ஒபாமா

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்: 25 பேர் பலி

நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE'S DAY )

"BE MY VALENTINE" என்றும் "FROM YOUR VALENTINE"என்றும் தங்கள் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிற உணர்ச்சிப்பூர்வமான நாள்இது!இதன் தொடக்கம் என்ன? எப்படி? ஏன்? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. மேலும்.......

இலங்கைத் தமிழர்களுக்கு அத்வானி ஆதரவு

"இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது ராணுவம் நடத்தும் குண்டுவீச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண வேண்டும், ஆயுதபலத்தைக் காட்டி ஒடுக்க முற்படக்கூடாது'' என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி எச்சரித்தார்.மேலும்.......

Thursday, February 12, 2009

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வலியுறுத்தல்

போரை நிறுத்துங்கள்: இலங்கை அரசு, புலிகளுக்கு பிரதிபா வேண்டுகோள் "இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரை உடனே நிறுத்த வேண்டும், பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது தற்போதைய பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றினார். இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் சுமார் 75 நிமிடங்கள் அவர் பேசினார்.மேலும்......

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள சதியை முறியடிக்க வேண்டும்: ஜெயலலிதா

ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது

Tuesday, February 10, 2009

கருணாநிதிக்கு இன்று ஆபரேஷன்

முதல்வர் கருணாநிதிக்கு முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சையை 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் புதன்கிழமை செய்கின்றனர்.

முதல்வர் கருணாநிதியின் (84) முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகு, நான்கு மயக்க மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் மயக்க மருந்து அளிக்கப்படுகிறது; மருத்துவமனையின் 6-வது மாடியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது.

கடுமையான முதுகு வலி காரணமாக கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி சேர்க்கப்பட்டார்.


முதுகின் அடிப்பாகத்தில் வலி தொடர்ந்ததால் நான்கு தினங்களுக்கு முன்பு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து முதுகுத் தண்டுவடத்தில் நரம்பை அழுத்தி வலியை ஏற்படுத்தும் முதுகுத் தட்டை அகற்றும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய (எய்ம்ஸ்) மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட நிபுணர் ஏ.ஜெய்ஸ்வால் தலைமையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட நிபுணர் கார்த்திக் கைலாஷ் உள்ளிட்ட நான்கு பேர் முதுகின் கீழ் பாகத்தில் நரம்பை அழுத்தி வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முதுகுத் தட்டை அகற்றும் அறுவைச் சிகிச்சையைச் செய்கின்றனர்.
மேலும் செய்திகள்.......

Monday, February 9, 2009

ஆப்கானிஸ்தானில் தமிழர் சைமன் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள் கடத்தி பிணைக் கைதியாக வைத்திருந்த விழுப்புரம் இளைஞர் சைமன் ஞாயிற்றுக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பிரம்மகுண்டம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம்-அழகம்மாள் தம்பதி மகன் சைமன்(31). இவர் கடந்த ஜனவரி மாதம் சமையல் வேலைக்கு ஆப்கன் சென்றார். இவரை இவரது அண்ணன் சுப்பிரமணியன் அழைத்துச் சென்றார்.

இத்தாலியின் தனியார் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் சைமன் வேலையில் சேர்ந்தார். அந் நிறுவனம் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இத்தாலி நாட்டு ராணுவ வீரர்களுக்கு உணவு தயாரித்து அளிக்கும் பணியை செய்து வருகிறது.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஹேரத் மாவட்டத்தில் பக்ராம் விமானதளத்தில் தங்கியிருந்த சர்வதேச பாதுகாப்பு படையினருக்கு உணவு கொடுக்கச் சென்றபோது சைமனை தலிபான்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். சைமனுக்கு உதவியாகச் சென்ற உள்ளூர் மொழிபெயர்ப்பாளரும், டிரைவரும் கடத்தப்பட்டனர்.

ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 75 லட்சம்) கொடுத்தால் அவரை விடுவிப்போம் என்று தீவிரவாதிகள் ஆரம்பத்தில் நிபந்தனை விதித்திருந்தனர்.

அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சைமனின் குடும்பத்தார் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இரக்கம்காட்டி கணவரை விடுவிக்கும்படி அவரது மனைவி வசந்தியும் கடத்தல்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சைமன் உயிரிழந்த சோகத் தகவலை காபூலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபூலில் வேலை செய்யும் சைமனின் சகோதரர் சுப்பிரமணியத்தையும் இந்திய தூதரக அதிகாரிகள் திங்கள்கிழமை காலை தொடர்பு கொண்டு சைமன் சாவு பற்றிய தகவலை தெரியப்படுத்தி நேரில் வரும்படி கூறினர்.

வசந்திக்கும் அவரது கணவர் சாவு பற்றி தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சைமனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அவர் இயற்கையான முறையில் இறந்தாரா அல்லது தீவிரவாதிகளே கொன்றுவிட்டனரா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சைமன் சாவு தொடர்பாக மேலும் விவரம் அறிய காபூலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் ஹேரத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளும் ஆப்கன் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட சைமனுக்கு மனைவி வசந்தி, நிர்மலா (10), அஜீத் (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

சைமனின் சடலத்தை ஒப்படைக்கவும் தீவிரவாதிகள் பணம் கேட்பதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவல் சைமன் அண்ணன் சுப்பிரமணியன் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. சைமனின் சடலத்தையாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் கடத்தல்காரர்கள் கடத்திய 3-வது இந்தியர் சைமன். ஆப்கானிஸ்தானில் எல்லைச் சாலை நிறுவன டிரைவராக பணியாற்றிய எம்.ஆர்.குட்டி மற்றும் பொறியாளர் கே.சூர்யநாராயணன் ஆகிய இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொன்றுள்ளனர். மேலும் செய்திகள்.....

Sunday, February 8, 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கான கேள்விகள்? -நாக.இளங்கோவன்

பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க, வி.சியொடு பிற அரசியல் சார்பிலரைக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கின்ற இந்த இ.த.பா.இ தமிழ் மக்களால் வரவேற்கப் படுகிறது.

அதே நேரத்தில் சில அடிப்படை கேள்விகளை இவ்வமைப்பு தோற்றுவிக்கிறது.

ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிடாமல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிட்டது, செயலலிதா, ஈழம் என்றே ஒன்று இல்லை - இலங்கை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொன்னதாலா என்ற வினா எழுந்தாலும் பிற வினாக்களையே முதன்மையாகக் கருதவேண்டும்.

இ.த.பா இயக்கத்தில் உறுப்பினர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள். அது நமக்கு ஆறுதல் தருகிறது.

ஆனால், அதில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் ம.தி.மு.கவும் வெளிப்படையாக அ.தி.மு.க ஆதரவு கொண்டவை.

பா.ம.க ஒரு தரம் காங்கிரசு தலைமையை ஏற்போம் என்கிறது. மறு தரம் தி.மு.க தலைமையை ஏற்போம் என்கிறது. உள்ளுக்குள்ளே அ.தி.மு.கவுடனும் பேச்சு நடத்துகிறது என்றே செய்திகள் சொல்கின்றன.

ஆக, இந்தக் கூட்டணி எதை சாதிக்கப் போகிறது என்று, ஈழத்தமிழர் பால் அக்கறை உள்ள தமிழக இளைஞர்களும் பொதுமக்களும் கேட்டால் என்ன விடை சொல்லும் இ.த.பா.இ?

மேலும்......

Saturday, February 7, 2009

"எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுங்கள்'' சென்னையில் லெஸ்பியன் பெண் பேட்டி

"எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் தரப்படவேண்டும்'' என்று லெஸ்பியன் பெண் ஒருவர் கூறினார்.

நம்மூரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட பெண்கள் (லெஸ்பியன்கள்) அதிகம் பேர் உள்ளனர். சிலர் திருமணமாகி, குழந்தைகள் பெற்று கணவருடன் வசிக்கும் நிலையிலும் கூட, லெஸ்பியன் உறவை தொடரும் நிலை உள்ளது. இளம் வயது பெண்கள் பலரும் லெஸ்பியன்களாக உள்ளனர். அவர்கள், பெரும் மனப்போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

இவர்கள், தங்களுக்கு உள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் பற்றி யாரிடமும் தைரியமாக சொல்ல முடியாத நிலை உள்ளது. பல பெண்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். இவற்றை கருத்தில் கொண்டு, ஆக்ஷன் எய்டு மற்றும் ஐசிடபிள்யுஓ என்னும் தன்னார்வ குழுக்கள், சென்னை அண்ணா நகரில், லெஸ்பியன்களுக்கான உதவி மையத்தை நேற்று தொடங்கின. இங்கு, தொலைபேசி வழியாக, (தொலைபேசி எண் - 65515742) லெஸ்பியன் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், லெஸ்பியன் பெண்களை ஒதுக்க மாட்டோம் என்று மாணவ-மாணவிகளும், மேலும் சிலரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சென்னையை சேர்ந்த ஒரு லெஸ்பியன் இளம்பெண் கூறியதாவது:-

``சிறு வயது முதலே எனக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது கிடையாது. என்னை ஆணாகவே நான் உணர்கிறேன். எனக்கு 13 வயது இருக்கும்போது பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் எங்களுக்கிடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டது. எங்களது உறவு வீட்டுக்குத் தெரியாது. வீட்டுக்குத் தெரிந்தால் என்னை அடித்து விரட்டி விடுவார்கள். நானும், எனது பெண் சகாவும் அவரவர் வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் வாரத்தில் சில தடவை கண்டிப்பாக சந்தித்து விடுவோம்.

``எங்களில் நான் கணவனைப் போலவும், எனது சகா, மனைவி போலவும் நினைத்து வாழ்ந்து வருகிறோம். நான் எப்போதும் ஆண்கள் போல் உடை அணிவதையே விரும்புவேன். எனது சகாவுடன் வெளியில் போகும்போது, அவளை எந்த ஆணாவது கேலி செய்தால் பாய்ந்து அடித்துவிடுவேன்.

``சில பெண்கள், வீட்டுக்கு பயந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களால், கணவருடன் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. லெஸ்பியன் இளம்பெண்களும், திருமண பந்தத்தில் தள்ளப்படும்போது, பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பெண்கள், தங்களது நிலைமையை வெளியில் சொல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

எங்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவேண்டும். நான் வேலைக்குச் சென்று சொந்தக்காலில் நிற்கிறேன். நான் எந்த பிரச்சினையையும் சமாளித்து விடுவேன். ஆனால், எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கு, இந்த ஆலோசனை மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும். வெளிநாடுகளில், லெஸ்பியன் பெண்கள், திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல், இந்தியாவிலும் எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்று அந்த பெண் கூறினார். மேலும்.....

Thursday, February 5, 2009

தமிழ்குறிஞ்சியில் சிறப்புக்கட்டுரை.

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல் - ஆல்ப‌ர்ட். (அமெரிக்கா)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். 85அகவையிலும் ஈழத் தமிழருக்காக அவர்தம் நிம்மதியான வாழ்க்கைக்காக நீங்கள் சமீபத்தில் முன்னெடுத்த முயல்வுகளை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கிறேன். சர்வகட்சிக்கூட்டம், மத்திய அரசுக்கு கெடு, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்,எம்.பிக்கள் ராஜினாமா, நிதி வசூலித்து உயிரினுமினிய நம் உறவுகளுக்காய் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளிப்பது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு நீங்களே பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்து உறுதியோடு நின்றதை உலகமே உற்று நோக்கியது; உடனடியாக வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பவேண்டியும் நீங்கள் கோரிக்கை வைத்தபோது நாங்கள் அகமகிழ்ந்தோம். மேலும்.....
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...