
கொழும்பு நகரின் மீது விடுதலைப்புலிகளின் 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு குண்டு வீசி தாக்கியதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் சுட்டதில் அந்த 2 விமானங்களுமே வெடித்துச் சிதறிவிட்டதாகவும் ராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது.
செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட "இசட்-143' ரக போர் விமானங்களில் விடுதலைப்புலிகள் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.
அந்த 2 விமானங்களையும் மன்னாரில் உள்ள இலங்கை ராணுவத்தினர் ரேடார் உதவியுடன் பார்த்துவிட்டனர். உடனே கொழும்பிலும் நாட்டின் பிற நகரங்களிலும் உள்ள விமான எதிர்ப்புப் படைப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தத் தகவல் கிடைத்ததும் கொழும்பில் நகர விளக்குகளை அணைத்துவிட்டனர். வீடுகளிலும் விளக்குகள் எரியக்கூடாது என்பதற்காக நகரில் மின்சார சப்ளை உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. கொழும்பு நகரமே இருளில் மூழ்கியது. அதை "பிளாக்-அவுட்' என்று அழைப்பார்கள்.
அப்போது வானில் விமானங்கள் வருகின்றனவா என்று தெரிந்துகொள்ள "டிரேசர்-புல்லட்' என்று அழைக்கப்படும் சில விநாடிகளுக்கு மட்டும் வெளிச்சத்தைத் தரவல்ல வாணங்கள் வெடிக்கப்பட்டன. இரவு 9.30 மணிக்கு இரு விமானங்களும் தென்பட்டன. உடனே விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கின. அதே சமயம் வான் புலிகளும் குண்டுகளை வீசினர்.
மேலும்.......
சென்னை : ஐகோர்ட்டில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது
டைரக்டர் சீமான் சரண்
No comments:
Post a Comment