
சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கைது செய்து அழைத்து சென்றபோது அவர் பணிக்கு செல்வதுபோல் மிகவும் கம்பீரமாக நடந்து சென்றார்.
சென்னை வியாசர்பாடி, பெரியார்நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 18). இவரது கணவர் பெயர் மோகன். இவர், திருவான்மிïரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பமானதில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வயிற்றில் வளரும் குழந்தை தனக்கு சொந்தமானது இல்லை என்றும் மோகன் சண்டைபோட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் மோகன் சித்ரவதை செய்தார். ஜீவிதாவின் நகைகளையும் பறித்துக்கொண்டு வீட்டை விட்டும் விரட்டிவிட்டார்.
இதனால் ஜீவிதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா 8 மாத கர்ப்பத்தை சுமந்தபடி, வயிற்றை கையால் பிடித்துக்கொண்டு, கண்ணீரும், கம்பலையுமாக கடந்த 2-ந் தேதி அன்று அடையார் பெண் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து கதறி அழுதார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தார்.மேலும்.......
தங்கம் : ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது
பிரணாப்முகர்ஜியின் பதில் திருப்தி அளிக்க வில்லை : டாக்டர் ராமதாஸ் பேட்டி
ஏய் பெண்ணே ஒரு பெண்ணுக்கு செய்த நன்மைதான் என்ன? நீயே கேட்டு பதில் சொல்
ReplyDeleteஎல்லாம் அம்மாவின் எடுகோள் தான்.
ReplyDeleteகண்ட கண்ட பொறம்போக்குகளெல்லாம் காவல்துறைக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும். காவல்துறைக்கு தேர்வு செய்யும்போது உடல்தகுதி,பொது அறிவுடன், சமூக அக்கறை இருக்கிறதா என்பதற்கும் ஏதாவது தேர்வு வைத்து...இது போன்ற மூதேவிகளை வடிகட்ட வேண்டும்..அப்படி பண்ணினாத்தான் காவல்துறை உருப்படும்.
ReplyDelete