Tuesday, February 10, 2009

கருணாநிதிக்கு இன்று ஆபரேஷன்

முதல்வர் கருணாநிதிக்கு முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சையை 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் புதன்கிழமை செய்கின்றனர்.

முதல்வர் கருணாநிதியின் (84) முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகு, நான்கு மயக்க மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் மயக்க மருந்து அளிக்கப்படுகிறது; மருத்துவமனையின் 6-வது மாடியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது.

கடுமையான முதுகு வலி காரணமாக கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி சேர்க்கப்பட்டார்.


முதுகின் அடிப்பாகத்தில் வலி தொடர்ந்ததால் நான்கு தினங்களுக்கு முன்பு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து முதுகுத் தண்டுவடத்தில் நரம்பை அழுத்தி வலியை ஏற்படுத்தும் முதுகுத் தட்டை அகற்றும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய (எய்ம்ஸ்) மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட நிபுணர் ஏ.ஜெய்ஸ்வால் தலைமையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட நிபுணர் கார்த்திக் கைலாஷ் உள்ளிட்ட நான்கு பேர் முதுகின் கீழ் பாகத்தில் நரம்பை அழுத்தி வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முதுகுத் தட்டை அகற்றும் அறுவைச் சிகிச்சையைச் செய்கின்றனர்.
மேலும் செய்திகள்.......

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...