Wednesday, February 25, 2009

காசோலைகளை பெட்டிகளில் போட கட்டாயப்படுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு

வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே காசோலைகளை போடவேண்டும் என வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களால் பெட்டிகளில் போடப்படும் காசோலைகள் காணாமல்போவதாக புகார்கள் தொடர்ந்து வருவதையடுத்து ரிசர்வ் வங்கி அதிரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

பெட்டிகளில் போடப்படும் காசோலைகள் தொலைந்துபோவதாக வங்கிகளின் விசாரணை அதிகாரிகளுக்கு அதிக அளவில் புகார்கள் வரத் தொடங்கியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் காசோலைகளை வங்கி கவுன்ட்டர்களில் கொடுத்து அதற்கு அத்தாட்சியாக ரசீது பெற்று கைவசம் வைத்திருப்பது அவசியம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும்.......



ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்


எம்.எல்.ஏ.க்களின் வாகன செலவுகளுக்காக கூடுதலாக மாதம் ரூ.15 ஆயிரம்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...