Tuesday, February 22, 2011

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் - டக்ளஸும் டி.ஆர்.பாலுவும் சேர்ந்து நடத்திய நாடகம்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 136 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அண்மையில் பிடித்துச் சென்றனர். அங்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இது டக்ளஸ் தேவவானந்தாவும், டி.ஆர்.பாலுவும் தங்கள் சுய அரசியல் லாபத்துக்காக சேர்ந்து நடத்திய நாடகம் என்று தெரியவந்துள்ளது.
மேலும்படிக்க

Saturday, February 19, 2011

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் காலமானார்

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள்(வயது 81) யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மேலும்படிக்க

Thursday, February 17, 2011

ஆணிபுடுங்கும் இந்திய கடற்படை

இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்: மேலும் 24 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை 6 விசைப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

மேலும்படிக்க

Thursday, February 3, 2011

குழந்தையின்மை - Infertility


குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மை என்பது மானுட சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு துயரப்படுத்தும் குறையாகும். இது தம்பதியர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. வாழ்க்கையில் வெறுமை, ஏமாற்றம் பெண்களைப் பொறுத்தமட்டில் நாம் தாய்மை அடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் மலடி என்று சமுதாயம் கொடுக்கும் பட்டமும் அவர்கள் மனதைப் பாதிக்கின்றன. இதனால் சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடுகின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரை நம்மால் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் மற்றும் சமுதாயம் கூறும் வன்மையான சொற்கள் எல்லாம் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கூட சீர்குலையச் செய்து கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தி விவாகரத்தில் கூட முடியும்படியாய் செய்து விடுகிறது.

இந்த குழந்தையின்மைக்கான காரணங்ளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது ஆண்களைப் பொறுத்தவரை சில பிறவிக் குறைபாடுகள் தவிர சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவினாலும், கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸபெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆழ்கடல் மூழ்குதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபம் ஆண்களுக்கு விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட ஏதுவாகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட புட்டாலம்மை, சின்னம்மை போன்றவைகளின் தாக்கமும் மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பால்வினை நோய்களின் தாக்கமும் உயிரணுக்களின் வீரியத்தை குறைத்தும் அணுக்கள் வெளியேறாது தடைகள் ஏற்படுத்தியும் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணுகிறது.

பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கான காணங்கள் ஆண்களைவிட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உளவியல் ரீதியாக பார்க்கும் போது இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு, மன உளைச்சல், மன இறுக்கம், மன வேதனை, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேகமும் மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை போன்றவை காரணங்களாகின்றன.
உறுப்புகளின் குறைபாடுகள் :

உறுப்புகளின் குறைபாடுகள் ரீதியாகப் பார்க்கும் போது

* கன்னித்திரை பிழவுபட முடியாது கடினமாய் இருத்தல் (Hymen unholed)
* கர்ப்பப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை
* கர்ப்பப்பை கட்டிகள் (Ovarian Cyst)
* கர்ப்பப்பை இறக்கம்
* கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு (endometriosis)
* வெள்ளைபடுதல்
* மாதவிடாய் கோளாறுகள்
* விலிமிக்க மாதவிடாய் (Dysmennorrhoea)
* அதிக ரத்தப்போக்கு
* தொடர்ச்சியாய் கருச்சிதைவு ஏற்படுதல் (Habitual abortion)
* உடல் பருமன் (Obesity)
* சுரப்பி இயக்கக் கோளாறுகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
* தைராய்டு போன்றவைகள் காரணமாய் அமைகின்றன.

மேலும் பிறப்பு உறுப்புகளில் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவைகளால் ஏற்படும் குறைபாடுகள் கூட காரணங்களாய் அமைகின்றன.
மேலும்படிக்க
http://drsdevika.com/

Tuesday, February 1, 2011

12 வயது குழந்தைகள் இடையே `செக்ஸ்' உறவு

`செக்ஸ்' உறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 16 ஆக உள்ளது. 16 வயதுக்கு உட்பட்டவர்கள், `செக்ஸ்' உறவு கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...