Thursday, February 26, 2009

பி.எஸ்.என்.எல்.தொலைபேசி கட்டணங்கள் அதிரடி குறைப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசாகவும் குறைக்கப்படுவதாக டெல்லி மேல்-சபையில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.

`இந்தியா கோல்டன் 50' என்ற புதிய திட்டம் மூலம் பிரீ பெய்டு மொபைல் சந்தாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.



இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி நாளை (28-ந் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனிமேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது. மேலும்.......


இலங்கை : `சுடர் ஒளி' ஆசிரியர் வித்யாதரன் கைது


சுந்தர்.சி நடித்த `தீ' படத்திற்கு தடை

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...