
லாகூர் மைதானத்திற்கு பேருந்தில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது மைதானத்திற்கு அருகே முகமூடி அணிந்த 2 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர், சமாரவீராவுக்கும், பிரணவிதனாவுக்கும் மார்பில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் லாகூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் 3வது நாள் ஆட்டத்திற்காக லாகூர் கடாஃபி மைதானத்திற்கு இன்று காலை பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் பேருந்தை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் பேருந்திற்கு காவலாக வந்த ஐந்து காவலர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திலான் சமரவீரா, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சமாரவீராவுக்கும், பிரணவிதனாவுக்கும் மார்பில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் லாகூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும், 25 நிமிடங்கள் வரை தாக்குதல் நீடித்ததாகவும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முகமூடியும், குண்டு துளைக்காத உடையும் அணிந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கையெறிகுண்டுகள் மற்றும் நவீனரக ராக்கெட் லஞ்சர் ஆகியவற்றை பயங்கரவாதிகள் இத்தாக்குலில் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து காவல்துறையினருக்கு ஏற்கனவே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே இன்று கிரிக்கெட் வீரர்கள் மாற்று வழியில் மைதானத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்று வழியில் அழைத்து வரப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை உறுதி செய்துள்ளது.
தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமரவீரா மார்பில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.
காயமடைந்த 6 வீரர்களும் இப்போது நலமுடன் இருப்பதாகவும், காயங்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
அனைவரும் உடனடியாக பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் திரும்புகின்றனர். மேலும்.......
No comments:
Post a Comment