இலங்கை ஒலிபரப்பு கார்ப்பரேஷனுக்கு அளித்த பேட்டியில் கோத்தபய கூறியிருப்பதாவது:
"2005-ல் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தார். அப்போது விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவாக இருந்தனர். அந்த நிலையில் வன்னி பகுதியில் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஆரம்பித்தோம். அதன் தொடர் விளைவாகவே படிப்படியாக விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிந்தது.
அதன் பிறகு விடுதலைப் புலிகளின் ராணுவ வலிமையைப் பார்த்து மலைத்துவிடாமல், எதிர் நடவடிக்கைகளை எடுத்ததால் அவர்களை ஒடுக்க முடிந்தது. இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற நிலை இந் நேரம் ஏற்பட்டிருக்கும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற முடிவில் அதிபர் மகிந்த ராஜபட்ச உறுதியாக இருந்தார். அதற்காக ராணுவத்தில் உரிய பதவிகளுக்கு உரிய நபர்களைத் தேர்வு செய்து நியமித்துப் போரைத் தொடங்கினார். மேலும் படிக்க
No comments:
Post a Comment