பாலாவின் இயக்கத்தில் விஷால்,ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் அவன்-இவன்.இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை பற்றியும்,காரையார் சொரிமுத்தையனார் கோவிலை பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிங்கம்பட்டி ஜமீன் கடும்' கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அங்கு தீர்த்தபதி என்று ஒரு கேரக்டரை உருவாக்கி அவர் குடிப்பது போன்றும், சுற்றுலா விடுதியில் சண்டை போடுவது போன்றும் இறுதியில் அவரை நிர்வாணமாக விட்டு பொதுமக்கள் அடிப்பது போன்றும் உள்ளது.
மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும்படிக்க