Friday, February 24, 2012
இன்றைய இளைஞர்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பா? - "சுழல்" நாகராஜ்
"இந்திய நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள்" என மகாத்மா காந்தியடிகள் சொன்னார். ஆனால் இன்று காந்தியடிகள் உயிரோடு இருந்திருந்தால் இந்த வார்த்தைகளை அவர் உதடுகள் உச்சரித்திருக்காது.
9-02-12 அன்று 140 வருட பழமை வாய்ந்த பள்ளியில் ஒரு மாணவன் தன் தாயைப் போல் நினைக்க வேண்டிய ஒரு ஆசிரியயை, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
இது மாணவ சமுதாயத்திற்கு மட்டும்மல்ல கல்வி கூடங்களுக்கும் இது ஒரு தலை குனிவு தான்.
அந்த காலத்தில் ஆசிரியர்களை குரு போல் பாவித்து தன் பெற்றோர்களுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ? ஆனால் ஆசிரியர்களுக்கு பயந்து நல்லொழுக்கத்தை கற்றுக்கொண்ட மாணவர்கள் ஏராளம்.
அதே போல் அன்றைக்கு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் நன்றாக அடித்து சொல்லிக் கொடுங்கள் என்று ஆசிரியர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு பெற்றோர்களோ ஒரு மாணவன் படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டிவிட்டால் "என் குழந்தையை நீ எப்படி திட்டலாம், அடிக்கலாம்" என்று ஆசிரியர்களிடம் சண்டைக்கு போவதோடு நிற்காமல், போலீஸில் புகார் கொடுத்து அந்த ஆசிரியரை சிறைக்கு அனுப்ப நினைக்கிறார்கள்.
அதன் விளைவு "வகுப்பறையில் ஒரு மாணவனால் ஆசிரியை கொலை " அந்த ஆசிரியையின் கொலைக்கு சொல்லப்படும் காரணம், அந்த ஆசிரியை கண்டிப்புடன் நடந்து கொண்டது தான். "எனக்கென்ன நீ எக்கேடும் கெட்டுப்போ" என அந்த ஆசிரியை நினைத்திருந்தால் அவர் மரணத்தை தழுவியிருக்கமாட்டார். அந்த ஆசிரியையின் இரண்டு குழந்தைகளும் இன்று அனாதையாக இருந்திருக்காது.
ஆனால் நம் நாட்டின் கல்வித் தரம் எப்படி உயரும்?. விஞ்ஞானிகள் அறிவாளிகள் பொறியாளர்களை இந்த கல்விக்கூடம் எப்படி உருவாக்கும்?. எனவே பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். கொலை செய்த அந்த மாணவன் கண்டிப்பாக ஒரு நல்ல பையானாக அவன் அவர்கள் விட்டில் வளர்ந்திருக்க மாட்டான்.
இந்த வயசில் "என்னை விட்டுடா" என்று கெஞ்சிய ஆசிரியயை கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்திருக்கிறான். அவனுக்கு கடுமையான தண்டனை நிச்சயம் வழங்க வேண்டும். அதை விடுத்து விட்டு "அவன் நன்றாக தூங்குகிறான். அவன் நன்றாக மற்ற குழந்தைகளோடு விளையாடுகிறான்", "TV பார்க்கிறான்" என்று அவன் மனநிலையைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இறந்து போன ஆசிரியையின் குழந்தைகளைப் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு மரியாதை. அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதிலும் சட்டம் என்ன சொல்கிறது என்கின்ற கலந்துரையாடல் கூட்டங்கள் வேறு நடை பெறுகிளதாம். ஒரு மைனர் பையன் ஒரு கொலை செய்துவிட்டால் அவனுக்கு 18 வயது வந்தவுடன் அந்த தண்டனையிலிருந்து விடுபட்டு விடலாம் என சட்டம் சொல்வதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அப்படி அவன் 18 வயது வந்தவுடன் தண்டனையில்லிருந்து விடுபடலாம் என்றால் இதை சமூக வீரோதிகள் தவறாகப் பயன் படுத்தி மைனர் பையன்களை சமுக விரோத செயலில் ஈடுபடுத்தமாட்டார்களா.
17 வயது பையனுக்கு மூலைச் சலவை செய்து குற்றம் செய்வதற்கு தூண்டி விடமாட்டார்ளா? இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நீதிமன்றம் அந்த மாணவனுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் இது போன்ற ஒரு ஒழுக்கமற்ற செயலை மற்றவர்கள் செய்வதற்கு பயப்படுவார்கள்.
அப்படி ஒழுக்கமுள்ள இளைஞர் சமுதாயம் உருவானால்மட்டுமே! காந்தியடிகள் சொன்னது போல் இளைஞர்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக மாற முடியும் .
நன்றி : தமிழ்க்குறிஞ்சி
Thursday, February 23, 2012
சென்னை என்கவுன்டர் - போலீசார் நடத்திய நாடகம்
சென்னை வேளச்சேரியில் நேதாஜி சாலையில் ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீசார் நினைத்திருந்தால் கொள்ளையர்களை உயிருடன் பிடித்திருக்க முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
மேலும்படிக்க
Sunday, February 19, 2012
Friday, February 10, 2012
Friday, February 3, 2012
Subscribe to:
Posts (Atom)