Wednesday, December 16, 2009

'சாக' அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பெண்ணின் பரிதாபக் கதை

மராட்டிய மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷான்பாக். 1966-ம் ஆண்டு நர்சு படிப்பை முடித்த அவர் மும்பையில் உள்ள `கெம்' மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். 1973-ம் ஆண்டு அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய ஒரு காமகொடூரனால் கற்பழிக்கப்பட்ட ஷான்பாக், அவன் தாக்கியதில் காயமடைந்து சுயநினைவை இழந்தார். அப்போது படுக்கையில் விழுந்தவர்தான், கடந்த 36 ஆண்டுகளாக அவருக்கு நினைவு திரும்பவே இல்லை.

தற்போது அவருக்கு, 59 வயதாகிறது. அவருக்கு மீண்டும் நினைவு திரும்புமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அவரது எலும்புகள் தெரியும் மெலிந்த தேகமும், யாருக்கும் இந்த கதி நேரக் கூடாது என்ற வேதனையும், தற்போது நீதி தேவதையின் கதவுகளை தட்டியிருக்கின்றன.

ஷான்பாக்கின் பரிதாப நிலையை கண்டு பொறுக்க மாட்டாமல், அவரது நெருங்கிய தோழி, பிங்கி விராணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்து இருக்கிறார்.

`என்னை நிம்மதியாக சாக அனுமதியுங்கள்' என்ற கோரிக்கைதான் ஷான்பாக் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவின் சுருக்கம்.
மேலும்படிக்க

ஸ்ரீகுமார் சாமியாரின் பாலியல் பலாத்காரம் : இளம்பெண் ஹேமலதா குமுறல் பேட்டி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...