சென்னை, தீவுத்திடல் இந்திரா காந்தி நகரில் வசிப்பவர் குமார்; கூலித்தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் தில்ஷன் (13) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். அப்பகுதி சிறுவர்கள் விடுமுறை நாட்களில் குடியிருப்பின் அருகே, கோட்டை வளாக, ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்று, அங்குள்ள மாமரங்களில் பழம், பாதாம் கொட்டை பறிப்பது வழக்கம். நேற்று பிற்பகல் 2 மணியளவில் தில்ஷன், அப்பகுதி சிறுவர்கள் மூன்று பேருடன் ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்று, வாதாம் மரத்தில் ஏறி அதிலுள்ள காய்களை பறிக்க முயன்றான். அப்போது, குடியிருப்பின் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுவன் தில்ஷன் தலையில் குண்டுபாய்ந்து துளைத்து சென்றுவிட்டது. படுகாயமடைந்த அவன் சுருண்டு விழுந்தான்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment