Thursday, December 15, 2011

தொழில் அதிபர் மனைவி கொலை - கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது

சென்னை திருமுல்லைவாயலில் தொழில் அதிபர் மனைவி கொலை வழக்கில், கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருமுல்லைவாயல், வெங்கடாச்சலம் நகர், 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் லியாகத்அலி (வயது 50). தொழில் அதிபரான இவர், சென்னை பாடியில் லேத் பட்டரை நடத்தி வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (46). இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை யாஸ்மின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது காது அறுந்து தொங்கியது. அவரை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவை உடைத்து அதற்குள் இருந்த நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இந்த கொலை-கொள்ளை வழக்கில் துப்புதுலக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலை நடந்த 2 நாட்களில் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்தனர்.

மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...