நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.

இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.
ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment