Friday, November 27, 2009

ரூ.30 ஆயிரம் வரதட்சணை பாக்கி : மணமகன் தலைமறைவு

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், இந்துபூர் பேட்டை மண்டலத்தை சேர்ந்தவர் உக்கால கிருஷ்ணய்யா. இவருடைய மனைவி வெங்கடம்மா. இவர்களுடைய மகள் சந்தோஷ் குமாரி (வயது 24). பி.எஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், சென்னை கொளத்தூர் வசந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த மால கொண்டய்யாவின் மகன் மாலயாத்திரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாலயாத்திரி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) வேலை பார்த்து வருகிறார்.

திருமண வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 7 சவரன் நகையும் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். அதற்கு பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரு வீட்டாரும் பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் நேற்று காலை இவர்களுடைய திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு அதே திருமண மண்டபத்திலேயே திருமண வரவேற்பு நிகழ்ச்சி `தடபுடல்' விருந்துடன் நடந்தது.

திருமணத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் 100-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தனர். அங்கு வந்த அவர்கள் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை வரதட்சணையாக மாப்பிள்ளையிடம் கொடுத்தனர். மீதிப்பணத்தை தாலி கட்டும் நேரத்தில் தருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மணமகன் மாலயாத்திரி `திடீரென்று' காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. திருமண முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டே இருந்தது.

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...