திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருக்கோயிலில் ராஜகோபுரம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ. 2.50 கோடியில் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.
வியாழக்கிழமை காலை கோயிலின் விமானத் தளத்துக்கு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு முற்பகல் 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகம் கண்கவர் மின்விளக்குகளாலும், ராஜகோபுரம், விமானங்கள் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை தரிசிக்க 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு