Tuesday, July 14, 2009

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் அல்கொய்தா மிரட்டல்

உரும்கி நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தி 184 பேர் பலியாக காரணமாக இருந்ததற்காக பதிலடி கொடுக்க அல்கொய்தா திட்டமிட்டு உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி பழிக்கு பழி வாங்குவோம் என்று அல்கொய்தா மிரட்டி உள்ளது.

சீனாவில் ஷின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் இன முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மெஜாரிட்டி சீனர்களுக்கும், உய்க்குர் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்தது.

கலவரத்தை அடக்க முற்பட்ட ராணுவம் உய்க்குர் இன முஸ்லிம்கள் மீது தடி அடி நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் அதை ஒடுக்கியது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 184ஆகும். 1600 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அல்கொய்தா, இயக்கத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சீனாவுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். அல்ஜீரியாவில் உள்ள அல்கொய்தாவுக்கு அந்த நாட்டில் இஸ்லாமிக் மாக்ரெப் என்று பெயர் அது ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்து உள்ளது. அல்கொய்தா சீனாவுக்கு மிரட்டல் விடுத்து இருப்பது இதுதான் முதல் முறை ஆகும். இந்த மிரட்டலில் அல்கொய்தா கூறி இருப்பதாவது.மேலும் படிக்க

Related post



1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...