தெலுங்கு பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவை போதை பொருட்கள் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் போதை பொருளை கடத்தி விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகர் தருணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். வேறு சில நடிகர்களுக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment