Tuesday, April 28, 2009

சென்னையில் ரூ.1 1/2 கோடி பணத்துக்காக பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகன் கடத்தல்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.1 1/2 கோடி பணத்துக்காக ஜவுளிக்கடை அதிபரின் மகனை கடத்தி சென்ற பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.87 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் `கலந்தர் மதினா டெக்ஸ்டைல்ஸ்' என்ற பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளரின் பெயர் கலந்தர் நைனார் முகமது. கோடீஸ்வரரான இவரது மகன் யூனிஸ்கான் (வயது 24). தந்தையோடு சேர்ந்து ஜவுளிக்கடையை கவனித்து வந்தார்.

இவருக்கு வருகிற மே 10-ந் தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு யூனிஸ்கான் ஜவுளிக்கடையில் இருந்து அருகில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த நைனார் முகமது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவன் ஜவுளிக்கடை அதிபர் நைனார் முகமதுக்கு செல்போனில் பேசினான். யூனிஸ்கானின் செல்போனில் இருந்து அந்த ஆசாமி பேசினான். ரூ.11/2 கோடி பணத்துக்காக உங்கள் மகனை கடத்தி வந்து சிறை வைத்துள்ளோம் என்றும் ரூ.11/2 கோடி பணத்தை தந்தால் உங்கள் மகனை பத்திரமாக விட்டு விடுகிறோம் என்றும் செல்போனில் பேசிய ஆசாமி குறிப்பிட்டான்.

போலீசுக்கு போனால் உங்கள் மகனை உயிரோடு பார்க்க முடியாது. உங்கள் மகன் உடலில் வெடிகுண்டுகளை கட்டி வைத்துள்ளோம். நீங்கள் போலீசுக்கு போனால் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உங்கள் மகனின் உடலை சின்னாபின்னமாக்குவோம். சினிமா பட பாணியில் சிதைந்து போன உங்கள் மகனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி உங்கள் வீட்டு வாசல் முன் வீசுவோம் என்று செல்போனில் பேசிய ஆசாமி மிரட்டினான்.

இதனால் பயந்து போன நைனார் முகமது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக போலீசாரிடம் ரூ.11/2 கோடி பணத்துக்காக எனது மகனை கடத்தி சென்றுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் நான் பணத்தை கொடுக்கும்போது நீங்கள் மாறுவேடத்தில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் போலீசாரை நைனார் முகமது கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...