Wednesday, April 15, 2009

நடிகை நயன்தாரா கோவிலுக்குள் சிறைவைப்பு, மன்னிப்பு கேட்டபின் விடுவிக்கப்பட்டார்



நயன்தாரா என்றாலே சர்ச்சைக்குரிய நடிகை என்றாகி விட்டார். நடிகர் சிலம்பரசனுடன் காதல் பிறகு மோதல், இன்டர்நெட்டில் ஆபாச படம், `பையா' படத்தின் சம்பள பிரச்சினைஈ இப்போது பிரபுதேவாவுடன் காதல் என்று பரபரப்புக்கு மேல் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர், சேலை கட்டிய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிற ஒரு அம்மன் கோவிலுக்குள், சுடிதாருடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகில் கெல்லிக்காவு அம்மன் கோவில் என்ற பழமையான கோவில் உள்ளது. மிக பிரபலமான அந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதுபற்றி நயன்தாரா ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தார்.

அவர் நடிக்கும் `பாடிகார்ட்' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு கெல்லிக்காவு அம்மன் கோவில் அருகில் நடந்தது.

படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாரா, காரில் அந்த கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் சுடிதார் அணிந்திருந்தார். கெல்லிக்காவு அம்மன் கோவிலுக்குள் சேலை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது, அந்த கோவிலின் ஐதீகம்.

ஆனால் நயன்தாரா சுடிதாருடன் துணிச்சலாக அந்த கோவிலுக்குள் நுழைந்தார். அம்மனுக்கு முன்னால் நின்றபடி பக்தியுடன் சாமி கும்பிட்டார். அதற்குள், நயன்தாரா சுடிதார் அணிந்து கோவிலுக்குள் வந்திருக்கும் தகவல் பரவிவிட்டது.

கோவிலுக்குள்ளும், வெளியேயும் நின்ற பக்தர்கள் ஆவேசமாக நயன்தாராவை சூழ்ந்தார்கள். சுடிதார் அணிந்து எப்படி கோவிலுக்குள் வரலாம்? என்று நயன்தாராவிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அவர்களுடன் நயன்தாராவும் வாக்குவாதம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவரை வெளியில் போகவிடாமல், கோவிலுக்குள்ளேயே சிறை வைத்தார்கள். மேலும் படிக்க

சிங்கள ராணுவம், மீண்டும் வெறித்தாக்குதல் 180 தமிழர்கள் பலி

ஜெயலலிதாவுக்கு செசன்சு கோர்ட்டு சம்மன்: ஜுன் மாதம் 2-ந் தேதி ஆஜராக வேண்டும்


தமிழ் உலகம் மடற்குழுவில் ஈழத் தமிழர்களுக்கான கூட்டு பிரார்த்தனை

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...