Tuesday, April 14, 2009

சாமியாரால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு கோவில் கட்டி, அதன் அருகிலேயே ஆசிரமம் நடத்தி வருபவர், சாமியார் அசோக்ஜி.

இவர் முக்கியமானவர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோசியம் சொல்லி வந்தார். முக்கிய போலீஸ் அதிகாரிகளுடனும் சாமியார் அசோக்ஜிக்கு தொடர்பு உள்ளது. இவருக்கு பல பெண்களுடன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் செல்வம், அசோக்ஜியின் சீடர். இவருடைய வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி வந்தபோது, கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வரும் செல்வத்தின் மகள் சுதா(வயது 18)வுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தனது மகள் சுதாவை திருமணம் செய்வதாக கூறி சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டதாக, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுதா, செல்போனில் போலீசாரை தொடர்பு கொண்டு, `என்னை யாரும் கடத்தவில்லை. நானாகத்தான் வந்தேன்' என்றார். தொடர்ந்து அவரிடம் பேசிய போலீசார், சுதாவுக்கு அறிவுரைகள் வழங்கியதோடு, வத்தலக்குண்டு போலீசில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை ஆஜராவதாக போலீசாரிடம் தெரிவித்த சுதா, போனை வைத்துவிட்டார். மேலும் படிக்க

சென்னையில் நாளை நடைபெறவுள்ள போலீஸ் குடும்ப பேரணிக்கு மீண்டும் தடை

தேர்தலில் ரஜினிகாந்த் படத்தை பயன்படுத்த ரசிகர்களுக்கு தடை

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...