விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.எஸ்.என்.எல். மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை.
உரையாடல் மட்டுமின்றி, ஒலி, ஒளி காட்சிகளையும், தகவல் தொகுப்புகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதன் மூலம் அனுப்பலாம்.
இந்த இணைப்புகளுக்காக தயாநிதி வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பி.எஸ்.என்.எல். அமைத்தது.
அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது. ஆனால் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு "சன்' டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் படிக்க
No comments:
Post a Comment