Monday, April 27, 2009

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

மும்பை நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கியது தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர் எம்.கோபாலகிருஷ்ணன். மும்பையை சேர்ந்த பி.ஜெ.பைப் மற்றும் வெசல்ஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கியது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் மீதும், மும்பை துறைமுகம் இந்தியன் வங்கியின் உதவி பொதுமேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் மீது சென்னை 11-வது சி.பி.ஐ. கோர்ட்டில் 31.3.1993-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

பி.ஜெ.பைப்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் பி.ஜெ.வோரா, இயக்குனர்கள் கீதா வோரா, எஸ்பால், ராமராவ் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்து ரூ.30 கோடி அளவுக்கு கடன் வழங்கியதால் இந்தியன் வங்கிக்கு ரூ.8 கோடியே 76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...