Saturday, April 18, 2009

100 நாளில் வெளிநாட்டு கறுப்புப் பணம் மீட்பு: அத்வானி வாக்குறுதி

பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் வெளிநாட்டு கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி கூறினார்.

கறுப்புப் பணத்தை மீட்பதற்காக பாஜக சார்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு அவர் பேட்டியளித்தார்.
இதுவரை நாங்கள் சொன்னதை எல்லாம் செய்துள்ளோம். பாஜக இதுவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்துள்ளது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றுவோம் என்று கூறினோம். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 1998-ம் ஆண்டு இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றினோம்.

கறுப்பு பண விவகாரம் நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரமும் கூட. கறுப்பு பணம்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் கறுப்புப் பணம் இருப்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பணம் எப்படி வந்தது என்பதை கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்ப முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ. 25 லட்சம் கோடியிலிருந்து ரூ. 70 லட்சம் கோடி வரை இருக்கும் என்று நாங்கள் நியமித்த சிறப்புக் குழு மதிப்பிட்டுள்ளது. அண்மையில் லண்டனில் நடந்த ஜி-20 நாடுகளில் கறுப்புப் பண பிரச்னையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திப் பேசாதது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்பை உலக அரங்கில் வலியுறுத்திக் கூறுவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் செய்யவில்லை என்றார் அத்வானி.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வராதது ஏன் என்று கேட்டபோது...... மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...