Wednesday, April 22, 2009

மன்மோகன்சிங் அவசர ஆலோசனை : உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் வற்புறுத்த முடிவு.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி தமிழ்நாட்டில் இன்று (வியாழக்
கிழமை) அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று இரவு உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். பிரதமரின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை மந்திரி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும். படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...