
பெங்களூரில் `பங்கி ஜம்ப்' சாகச விளையாட்டு விளையாடிய சென்னை மரைன் என்ஜினீயர் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் அறுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் பார்கவ் (வயது 23), மரைன் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர் `பங்கி ஜம்ப்' என்ற சாகச விளையாட்டு பற்றி இன்டர்நெட் மூலமாக தெரிந்து கொண்டார்.
கால் மற்றும் இடுப்பில் பெல்ட் கட்டிக்கொண்டு மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதித்து விளையாடுவதுதான் `பங்கி ஜம்ப்'. மரைன் என்ஜினீயரான பார்கவ் கப்பலில் தன்னுடன் பணியாற்றிய 20 நண்பர்களுடன் சேர்ந்து பங்கி ஜம்ப் விளையாட திட்டமிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஒரு `பங்கி ஜம்ப்' விளையாட்டு மையத்திற்கு சென்றனர். பங்கி ஜம்ப் விளையாட்டில் முதலில் பெல்ட் அணிந்து கொண்டு உயரமான இடத்தில் இருந்து கீழே குதிப்பார்கள். பின்னர் கீழே இருந்து மெல்ல மேலே கிரேன் மூலம் தூக்கப்படுவார்கள்.
பார்கவ் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் முதல்கட்டமான மேலே இருந்து கீழே குதிப்பதை வெற்றிகரமாக முடித்தார்கள். தான் முதல்முதலாக பங்கி ஜம்ப் விளையாட்டில் 200 அடி உயரத்தில் இருந்து கீழே சாகசமாக குதித்த செய்தியை சென்னையில் உள்ள தனது தாய்க்கு போன் மூலம் பர்கவ் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.
இந்த நிலையில், பங்கி ஜம்ப் விளையாட்டில் அடுத்த கட்டமான கீழே இருந்து மெல்ல மெல்ல பெல்ட்டில் தொங்கியவாறு செல்ல பர்கவ் மற்றும் அவரது நண்பர்கள் தயாரானார்கள்.
தனது நண்பர் ஒருவரின் வாய்ப்பு வந்தபோது அவர் விளையாட விரும்பாததால் பார்கவ் விளையாட முன்வந்தார். இதற்காக இடுப்பிலும், கால்களிலும் பாதுகாப்பு பெல்ட்டுகளை கட்டிக்கொண்டு விளையாட தயாரானார்.
200 அடி உயரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட கிரேன் மூலம் மெல்ல மெல்ல மேலே சென்றுகொண்டிருந்தார். அவர் வெற்றிகரமாக சென்ற காட்சியை பார்த்து நண்பர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர். மேலும் படிக்க
லண்டன் : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 2 லட்சம் பேர் ஊர்வலமாக சென்றனர்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரும் டாக்டர் ராமதாஸ் பேட்டி
No comments:
Post a Comment