காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பெற்ற தாய் பார்த்து விட்டதால், காதலனுடன் சேர்ந்து தாயை கத்தியால் குத்திக்கொன்ற பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த கொலையை மறைக்க அவர் கொள்ளை நாடகம் ஆடியதும் அம்பலம் ஆனது.
டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
டெல்லியில் பாஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் கபூர். அக்கவுண்டன்ட் ஆன இவரது மனைவி கிரண். இவர்களுக்கு சவுரப் என்ற மகனும், சாக்ஷி (வயது 26) என்ற மகளும் உள்ளனர். சாக்ஷி, அதே பகுதியில் ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 29-ந் தேதி கிரண், அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அப்போது அவரது கணவரோ, மகனோ வீட்டில் இல்லை. மகள் சாக்ஷி மட்டும்தான் இருந்தார்.
சாக்ஷியிடம் போலீசார் விசாரித்தபோது, 2 கொள்ளையர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து தனது தாயாரை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக சாக்ஷி கூறினார். கொள்ளையருக்குப் பயந்து, தான் வேறு ஒரு அறையில் ஒளிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
சாக்ஷியின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கைக்கெடிகாரம் திருடு போய் இருந்தாலும், 9 கெடிகாரங்கள் அப்படியே இருந்தன. நிறைய பணத்துடன் ஒரு பர்சும் அப்படியே இருந்தது. கொலையுண்ட கிரண் உடலில் கம்மல்களும், 4 வளையல்களும் அப்படியே இருந்தன. அவரது உடலில் இருந்த காயமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொள்ளையர்கள், ஒரு மணி நேரம் வீட்டிலேயே இருந்ததாக சாக்ஷி கூறினார். எந்த கொள்ளையனும், கொள்ளை அடித்த வீட்டில் அவ்வளவு நேரம் இருக்க மாட்டான். கிரண் உடலில் 24 கத்திக்குத்து அடையாளங்கள் இருந்தன. எந்த குற்றவாளியும் அத்தனை தடவை குத்த மாட்டான் என்று போலீசார் கருதினர். மேலும், வீட்டில் நிறைய வழிகள் இருந்தபோதிலும், சாக்ஷி ஏன் வெளியே சென்று பக்கத்து வீட்டாரை உதவிக்கு அழைக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.
சம்பவம் நடந்த அன்று, சாக்ஷி தனது செல்போனில் சன்னி பத்ரா (20) என்பவருடன் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது. ஆனால், போலீஸ் விசாரணையில் தனக்கு 15 ஆண் நண்பர்கள் உள்ளதாக கூறிய சாக்ஷி, சன்னி பத்ரா பற்றி எதுவுமே கூறாமல் மறைத்து விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சன்னி பத்ராவை தேடிப் பிடித்தனர். அவர், டெல்லி அருகே நொய்டாவில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு சாக்ஷியுடன் ஒன்றரை ஆண்டாக தொடர்பு உண்டு. அவரிடம் துருவித்துருவி நடத்தப்பட்ட விசாரணையில், கிரணை தானும், சாக்ஷியும் சேர்ந்து கொலை செய்ததாக கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரணின் மகள் சாக்ஷியையும் போலீசார் கைது செய்தனர். சாக்ஷியும் அழுதபடி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த கொலை நடந்தது எப்படி?
மேலும் படிக்க