Wednesday, June 24, 2009

எடையை குறைத்து, விலையை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை.

பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கட், வாஷிங் பவுடர் ஆகிய பொருட்களின் எடையை குறைத்தது மட்டும் அல்லாமல் விலையையும் உயர்த்தி விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.

சோப்பு, பவுடர், பிஸ்கெட், சாக்லேட், ஷாம்பு, வாஷிங் பவுடர் உள்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்களை இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தயார் செய்துவருகிறார்கள். இவர்கள் தயார் செய்யும் பொருட்கள் தரமானதுதானா? எடை சரியாக உள்ளதா? சரியான விலையில் விற்பனை செய்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் இந்த அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சமீப காலமாக உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் பொருட்களை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் விற்பனை வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் உற்பத்திசெய்யும் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம் போல உயர்த்துவது பற்றி கொஞ்சம் கூட அதிகாரிகள் கவலைப்படுவது இல்லை. இதனால் வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கெட், பவுடர், சாக்லேட், வாஷிங் பவுடர் போன்ற பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாதந்தோறும் உயர்த்தி வருகிறார்கள். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...