Monday, June 15, 2009

பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாரா? இலங்கை ராணுவ தளபதி மறுப்பு

பிரபாகரனை சிங்கள ராணுவத்தின் 53-வது படைப்பிரிவினர் உயிருடன் பிடித்து சென்று சித்திரவதை செய்து கொன்றதாக வெளியான தகவலை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

வன்னியில் உள்ள நந்தி கடல் கழிமுக பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் தெரிவித்தது. கடந்த மாதம் 18-ந் தேதி அன்று நடந்த சண்டையில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும் மறுநாள் (19-ந் தேதி) அவரது உடலை நந்தி கடல் பகுதியில் கண்டெடுத்தாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால், சில முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரபாகரனை சிங்கள ராணுவம் உயிருடன் பிடித்துச் சென்று ராணுவ தலைமையகத்தில் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து, `யாழ்ப்பாணம் பல்கலை கழக ஆசிரியர்கள் மனித உரிமைகள் அமைப்பு' வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி, பிரபாகரனை சிங்கள ராணுவத்தின் 53-வது படைப் பிரிவினர் உயிருடன் பிடித்துள்ளனர். பின்னர் அந்த படைப்பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...