இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு
தமிழறிஞரா? இல்லை!
வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!
சொன்னவர் அமெரிக்க மொழியியல்
ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்"
என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த
தமிழ்பற்றாளர் யார் தெரியுமா?
தமிழகத்தில் பிறந்த தவத்திரு
தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!
"என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல்,
'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'
என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.
இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை
தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில்
சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன்
மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச்
செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர்
வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக...இலண்டன் பல்கலைக்கழகக்
கல்லூரியான கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும்
பேரா.சிவாபிள்ளை அவர்களை புலம்பெயர்ந்தும் தமிழ் வளர்க்கும் செம்மல்கள்
வரிசையில் முதலாவதாக தமிழ் குறிஞ்சி இணைய இதழுக்காக நிகழ்த்திய மின்
நேர்காணல்
No comments:
Post a Comment