Tuesday, June 23, 2009

அடுத்தடுத்து கிரகணங்கள் ஏற்படுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா?

ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று மூன்று கிரகணங்கள் தோன்றுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா என்ற பீதி கிளம்பியுள்ளது.

வானத்தில் மிகவும் அரிதான காட்சிகள் தோன்றுவது வழக்கம். ஒரே நேர்கோட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் வருவது, பூமிக்கு அருகில் ஏதாவது ஒரு கோள் நெருங்கி வருவது என ஆர்வத்தை தூண்டும் அபூர்வ நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.

அதுபோல, மற்றொரு அரிய நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜுலை) மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற உள்ளது.

அதாவது, ஜுலை 7-ந் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந் தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் 6-ந் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் தோன்றுகின்றன.

22-ந் தேதி தோன்றும் சூரிய கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். அதிகாலை 5.30 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றும்.

ஒரு மாத காலத்துக்குள் அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்' தோன்றுவது வானியல் சாஸ்திரத்தில் ஆச்சரியம் அளிக்கும் நிகழ்ச்சி. ஆனால், தொடர்ந்து 3 கிரகணங்கள் தோன்றுவதால் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என்று பீதியை கிளப்புகின்றனர், பெங்களூரைச் சேர்ந்த ஹரி மற்றும் ஹேமா ஹரி என்ற தம்பதியினர். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...