Thursday, June 25, 2009

டாக்டரிடம் வழிப்பறி செய்த என்ஜினீயரிங் மாணவர்கள்

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ராபர்ட். குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற டாக்டரான இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். முகப்பேரில் குடும்பத்தோடு வாழ்ந்தார். கடந்த 20-ந் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு டாக்டர் ராபர்ட் தனது காரில் வந்து கொண்டிருந்தார். கதீட்ரல் ரோட்டில் அண்ணா மேம்பாலம் அருகே வரும்போது, இன்னொரு காரில் வந்த 4 பேர் வழிமறித்தனர். டாக்டர் ராபர்ட்டை அடித்து உதைத்து அவரிடமிருந்து செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதுதொடர்பாக ராபர்ட் தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். டாக்டரிடம் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்றவர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

டாக்டரிடம் பிடுங்கி சென்ற கிரெடிட் கார்டு மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினார்கள். கொள்ளையர்கள் குறிப்பிட்ட அந்த கிரெடிட் கார்டு மூலம் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டது தெரிய வந்தது. குறிப்பிட்ட ஓட்டலில் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் வந்த காரின் பதிவு எண் தெரிய வந்தது. கார் நம்பரை வைத்து கொள்ளையர்கள் யார் என்று போலீசார் அடையாளம் கண்டனர். மேலும் படிக்க

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பறக்கும் கார்

தமிழர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...