Wednesday, June 10, 2009

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி

ஜோதி ஆம்கே, 15 வயதாகும் இந்த இந்திய சிறுமியின் பெயர் தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும், குள்ளமான சிறுமி என்ற பெயரை பெற்று இருக்கிறார். 6 மாத கைக்குழந்தை போல் பெற்றோர், சகோதர-சகோதரிகளின் இடுப்பில் தொற்றிக் கொள்ளும் இந்த சிறுமியின் எடை வெறும் 6 கிலோதான்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்த ஆம்கே கிஷன்-ரஞ்சனா தம்பதிகளின் கடைக்குட்டிதான் இவள்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த அர்ச்சனா(23), சதீஷ்(22), ரூபாலி(18) மூவருமே சராசரி வளர்ச்சியுடன் பிறந்தவர்கள். ஹார்மோன் சுரப்பு கோளாறு காரணமாக ஜோதியின் உயரமோ, உடலோ வயதுக்கு தகுந்த வளர்ச்சியடையாமல் போய்விட்டது. இதனால் பொம்மை போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார்.

3 வயதானபோது, தன் வயதையொட்டிய சிறுமிகள் ஆர்வத்துடன் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி போல் பள்ளிக்கூடம் செல்வதை பார்த்த ஜோதிக்கும் அவர்களை போல் தானும், பள்ளிக்கூடத்துக்கு துள்ளிக்குதித்து கொண்டு செல்லும் ஆவல் ஏற்பட்டது. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...