
சென்னையில் நகை வியாபாரியை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை 3 தெருக்களில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் வீட்டிலேயே ஒரு வேன், ஒருகார் வைத்து விநாயகா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். அத்துடன் கமிஷனுக்கு நகை விற்றுக் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
பெற்றோர் மற்றும் மனைவி பாரதி, மகன்கள் சரண் (9), சஞ்சய் (4) ஆகி யோருடன் வசித்து வந்தார். மனைவி பாரதி நுங்கம் பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் 1 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பிறகு இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது “சுவிட்ச்” ஆப்செய்யப்பட்டு இருந்தது. காலையில் வந்து விடுவார் என நினைத்து இருந்தனர். காலையிலும் அவர் வர வில்லை. செல்போனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சூளை நடராஜா தியேட்டர் அருகில் உள்ள சட்டண்ணன் தெருவில் இன்று அதிகாலையில் துண்டிக்கப்பட்ட 2 கைகள் பாலித்தீன் பையில் கிடந்தது. பெரியமேடு போலீசார் சென்று 2 கைகளை கைப்பற்றி விசாரித்தனர். இடது கையில் செம்பு மோதிரமும், வலது கையில் சிவப்பு கயிறும் கட்டப்பட்டு இருந்தது.மேலும் படிக்க
No comments:
Post a Comment